Dec 1, 2014

வருகின்ற 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் தமிழ்நாட்டில் முதலிடம் பெரும் வகையில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., பொங்கலூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் அவினாசிபாளையத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் .எஸ்.சிவாச்சலம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டம் கட்சி ரீதியாக 3 அமைப்புகளாக செயல்பட்டு வந்தது. இதுவரை புறநகர் மாவட்டத்தில் இருந்த பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க.இயக்கம் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றியை தந்துள்ளது. 
அந்த வகையில் வருகின்ற காலத்தில், பல்லடம் தொகுதி இணைக்கப்பட்டுள்ள  மாநகர் மாவட்ட கழகம் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும்; நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெற்று வெற்றியை ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
 திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா அவர்களின் எக்கு கோட்டையாக உள்ளது. மாநில அளவில் கடந்த தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக அளவில்  முதல் இடத்திலும், பல்லடம் தொகுதி இரண்டாவது இடத்திலுமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இனிமேலும் நமக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் வருகிற தேர்தல்களிலும் வெற்றிக்கனியை பறித்து அம்மா அவர்ளின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொங்கலூர் தொகுதியாக இருந்தபோது முதல் எம்.எல்.ஏ.வாக அண்ணா தி.மு.க.இயக்கம் உறுப்பினர்தான் வெற்றி பெற்றார். இப்பகுதிகளில் பல்வேறு வெற்றிகள் நம் இயக்க தொண்டர்களால் பெற்று இருக்கிறோம்.எனவே,வருகிற காலத்திலும் மாநகர் மாவட்டத்துடன் இணைந்து வெற்றிகளை பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில்  பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், .ஊராட்சி தலைவர்கள் யு.எஸ்.பழனிசாமி, கரைபுதூர் நடராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், எம்.மணி, ஸ்டீபன் ராஜ், தொகுதி செயலாளர் லோகநாதன் மற்றும் பொங்கலூர் ஒன்றியம்,  திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் அடுத்துள்ள பொங்கலூரில் நடந்த மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்