Oct 31, 2014

திருப்பூர் தேவர் பேரவை சார்பில் காங்கேயம் ரோடு,ராக்கியபாளையம் பிரிவு அருகில் நடந்த

107வது தேவர் ஜெயந்தி விழாவில் அவரது படத்திற்கு மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கரு.ராமச்சந்திரதேவர், பிரிண்ட் பீல்டு தம்பி, மூகாம்பிகை தங்கவேல்,அருணகிரி தேவர், டைகர் சிவா, குப்பாண்டிதேவர், மாணிக்கம்,தமயநாதன், தினேஷ், சண்முகம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன்,84 நெசவாளர்களுக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில்

மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட பல்லடம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம், மூகாம்பிகைநகரில் பூமிபூஜை விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் படையப்பா மூர்த்தி தலைமை தாங்கினார்.விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தண்ணீர்பந்தல் ப.நடராஜ்,காரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.நடராஜ்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.எஸ்.மணியன், சொக்கப்பன், நெசவாளர் கூட்டுறவு வங்கி இயக்குநர், பல்லடம் வட்டார வளர்ச்சிஅலுவலர் மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ,இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லாசைக்கிள் மற்றும் லேப் -டாப் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்


துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி,மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
கல்வித்துறையை மேம்படுத்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு  திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும் என ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற  அரசு கல்விக்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.1 முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்; இடைநிற்றலை தடுக்க வேண்டும். என்ற அடிப்படையில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிதிவண்டி, மடிக்கணினி உள்பட 14 வகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 15486 பேருக்கு ரூ.4.92 கோடி மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களால் தான் இன்றைக்கு கல்வியில் தமிழகம் 20-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திட்டங்களை  பெற்று தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் மாணவ, மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலம் சர்வதேச அளவில் உங்கள் கல்வித்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.உங்கள் பள்ளியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வழிகாட்டுதல் படி கல்வித்துறை  அமைச்சரிடம் பேசி இங்கு 30 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 2 கழிப்பறைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசும்போது; மக்கள் முதல்வர் ஜெயலலிதாவழிகாட்டுதல்படி உலகத்தில் எந்த பணக்கார நாட்டிலும் இல்லாத திட்டம் மாணவர்களுக்கு சைக்கிள்,, மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. 10, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.500 ம், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000- என ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு டெபாசிட் செய்கிறது. உலகத்திலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு சிறப்பான திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நீங்கள் ( மாணவர்கள்) முன்னேற வேண்டும் என பேசினார்..
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசுகையில்;தமிழக அரசு பள்ளிக்குழந்தைகள் கல்வித்தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்விக்காக தமிழக அரசு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை விலையில்லாமல் வழங்குகிறது. இதை நன்கு பயன்படுத்தி மாணாக்கர்கள் முன்னேற வேண்டும் என்றார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் உங்கள் தாய் தந்தையால் கூட தர முடியாத திட்டங்கள் வழங்கப்படுகிறது.முந்தய காலத்தில் இது போன்ற திட்டங்கள்எதுவும் இல்லை. ஜெயலலிதா வழிகாட்டுதல்படி அவரது அரசே கல்விக்காக  வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களும்  நன்றாக படிக்க வேண்டும் ; ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிஷப் உபகரசாமி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்ரூ.63.30 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 377 மாணவ, மாணவியர்களுக்கும், ரூ.16.30 லட்சம் மதிப்புள்ள மிதிவண்டிகள் 390 மாணவ, மாணவியர்களுக்கும்,, , ஜெயவாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.45 கோடி மதிப்பில் ஆயிரத்து 454 மாணவியர்களுக்கும், நஞ்சப்பா மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 394 மாணவர்களுக்கும் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் அவினாசி கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். 
பல்லடம் எம்.எல்.ஏ ,பரமசிவம் அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவினாசி ஒன்றிய குழுத்தலைவர் பத்ம நந்தினி ஜெகதீசன், பேரூராட்சி மன்றதலைவர் ஆர்.ஜெகதாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.விழாவில் பல்லடம் நகராட்சி துணைத்தலைவர்  வைஸ் பழனிசாமி, மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன்,கிருத்திகா சோமசுந்தரம்,நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, வசந்தாமணி, பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, பிரியா சக்திவேல், அவினாசி ஒன்றிய செயலளார் மு.சுப்பிரமணியம், நகர செயலாளர் ராமசாமி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, தொழில் அதிபர் கிளாசிக் போலோ சிவராமன், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி, கோகுல், சில்வர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி, கண்ணப்பன்,செல்வம் லட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் சாய்பாபா, இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107 வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்து வருகிறது

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107 வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்து வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது சமாதியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜு, காமராஜ், டாக்டர் சுந்தர்ராஜன், செந்தூர் பாண்டியன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னனி ஆகிய கட்சிகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்ன தானத்தினை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.உடன் எராளமான அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர் ...

தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் ..

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107 வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் ..

Oct 29, 2014

தொழிலாளர் நலன்களை காக்க நலத்திட்டங்களை வழங்கி வருபவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 2484 பேருக்கு 56.70 லட்சம் மதிப்பிலான அரசு உதவிகளை வழங்கி பேசினார்.


தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நல வாரியங்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் ராஜாராமன் வரவேற்று பேசினார். 
 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம.ஆனந்தன் பயனாளிகளுக்கு ரூ 56.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
மக்கள் நலனுக்காக ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் நல வாரியங்களை ஏற்படுத்தி, அதில் தொழிலாளர்களை உறுப்பினர்கலாக்கி, நல வாரியங்கள் மூலமாக  தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன் பெற வேண்டும் என செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இன்று பல்வேறு நல திட்டங்கள்;ஐ செய்து வருகிறது. 17 தொழிலாளர் நல வாரியங்களில் 1,17,528 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை, விபத்து, இயற்கை மரண உதவி தொகை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் எந்த மாநில கட்டுமான தொழிலாளியாக இருந்தாலும் நல உதவி வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் விழாவில் 213 பேருக்கு கல்வி உதவி தொகையாக  46 லட்சத்து 30 ஆயிரத்து ஐநூறு ரூபாயும், 85 பேருக்கு திருமண உதவி தொகையாக 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும், 19 பேருக்கு மகப்பேறு உதவியாக 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், 8 பேருக்கு கண் கண்ணாடி உதவி தொகையாக 3 ஆயிரத்து 983 ரூபாயும், 13 பேருக்கு இயற்கை மரண உதவி தொகையாக 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், 2 பேருக்கு விபத்து மரண உதவி தொகையாக 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், 144 பேருக்கு மாதம் ரூ 1000 க்கான ஓய்வூதிய ஆணைகள் என மொத்தம் 2484 பேருக்கு 56 லட்சத்து 70 ஆயிரத்து 483 ரூபாய் மதிப்பிலான அரசு உதவி வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நலத்திட்டங்களை உருவாக்கி தமிழக தொழிலாளர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவழிகாட்டுதல் படி தமிழக அரசு வழங்கி வருகிறது. வருகிற காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா தொழிலாளர்கள் நலனுக்காக இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளாரஇவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசும்போது,
தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. 10ம் வகுப்பு முதல் கல்லூரி வரை அரசு கல்வி உதவி வழங்குகிறது. திருமண உதவி, இயற்கை, விபத்து மரண உதவி மற்றும் ஓய்வூதியங்களை வழங்கி வருகிறது. இவ்வாறு தொழிலாளர் நலனுக்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.எனு கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்  படி உங்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் படி இந்த விழா நடக்கிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்களுக்கான திட்டங்களை எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் வழங்குகிறார்கள். அவர் மீண்டு மக்களுக்கான திட்டங்களை தொடர்வார்கள். என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கண்ணபிரான்,கலைமகள் கோபால்சாமி, ஜெகநாதன், சுந்தரமூர்த்தி, திருப்பூர் தொழிலாளர் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கே.வி.ஆர்.நகர் பகுதியில்

உள்ள கூலி தொழிலாளிகள்முருகன் மற்றும் மாகாளி ஆகிய இருவரின் வீடுகள் மழை காரணமாக  இடிந்து விழுந்தது.  வீடு இழந்த இருவர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் அரசு உதவி தொகை தலா ரூ.2500, மற்றும் வேட்டி-சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். உடன் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளார்.

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான

அநீதியை எதிர்த்தும், மீண்டும் அவர் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பெற்கவும், அவர் பூர்ண நலம் பெறவும் வேண்டி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் காரத்தொழுவு அருள்மிகு அழகு நாச்சியம்மன் கோவில், திருமூர்த்திமலை அருள்மிகு அமணலிங்கேசுவரர் கோவில்களுக்கு நடைபயணம் சென்று பிரர்த்தனை செய்தனர்.