Sep 25, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.














திருப்பூர் மாநகர் மாவட்ட  அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ,  அங்கேரிபாளையத்தில் நடந்தது. 
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார்,  தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர்  வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள்  சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

உள்ளாட்சி இடைத்தேர்தல் அ.இ .அ .தி .மு க .வெற்றி .







குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் அ.இ .அ .தி .மு க வேட்பாளர்  திரு .c மாசிலாமணி  வெற்றி பெற்றார் .வேட்பாளரை வாழ்த்தி  பொள்ளாச்சி .வ .ஜெயராமன் சட்ட மன்ற  துணை சபாநாயகர் பொள்ளாச்சி பாராளுமன்ற c மகேந்திரன் எம் .பி . சண்முகவேலு எம் .எல் .ஏ .அரசு கேபிள் டிவி  வாரியத்தலைவர் உடுமலை   ராதகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு தமயந்தி மாசிலாமணி உடன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி மற்றும் அ.இ .அ .தி .மு க.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்

Sep 24, 2014

ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நிதி, வணிகவரித்துறை திட்டங்கள் பற்றி ஆலோசனை



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று (23–ந் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிதித்துறை, வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் அதுபற்றி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.

Sep 23, 2014

வருமான வரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு இன்று விசாரணை

வருமான வரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு இன்று விசாரணை



வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

1993-1994-ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று என் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், வருமான வரித்துறை உதவி கமிஷனர் கடந்த 1996-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அந்த கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு, அதற்குரிய அனைத்து வகை வரி, கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்த தயாராக உள்ளதாக கூறி கடந்த ஜூன் 25-ந் தேதி வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பரிசீலனையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில், கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, என்னுடைய கோரிக்கை மனு வருமான வரித்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும் என்று என் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 30-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. இதன்பின்னர் இந்த காலஅவகாசம் செப்டம்பர் 6-ந் தேதி வரை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளிவைக்க கூடாது’ என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவியல் விசாரணை முறை சட்டம் 313-ன் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக அக்டோபர் 1-ந் தேதி தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவு சட்டப்படி ஏற்கமுடியாதது. அதை ரத்து செய்யவேண்டும். வருமான வரித்துறை சட்டம் பிரிவு 279(2)-ன் படி, வருமான வரி கணக்கு செலுத்தாதபட்சத்தில், அதற்குரிய கட்டணத்துடன் அனைத்து தொகைகளையும் செலுத்தலாம். எனவே அவ்வாறு சமரச மனு தாக்கல் செய்து கட்டணம் செலுத்த எனக்கு உரிமை உள்ளது.

ஆனால், இவற்றை விசாரணை கோர்ட்டு நீதிபதி கவனிக்க தவறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே கீழ் கோர்ட்டு நீதிபதி கருத்தில் கொண்டுள்ளார்.

ஆனால், வருமான வரித்துறைக்கு நான் கொடுத்துள்ள சமரச மனுவினால், இந்த வழக்கின் நிலை மாறி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த கால கெடுவை கீழ்கோர்ட்டு நீதிபதி பரிசீலித்து இருக்கக்கூடாது. மேலும் என்னுடைய சமரச மனுவை, (மனு கொடுத்த நாளில் இருந்து) 180 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சட்டம் கூறுகிறது.

எனவே, இந்த சூழ்நிலையில், என்னை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது அரசியல் சட்டத்துக்கும், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது செயலாகும்.

எனவே, வருமான வரி வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த 18-ந் தேதி எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற மனுக்களை சசிகலாவும் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அனைத்தும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. 

அம்மா உணவகத்தில் முதல்வர் ஜெயலலிதா

சென்னை: சென்னையில்முதல்வர் ஜெயலலிதா மேலும் 4 அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள கஸ்தூர்பா மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது உணவகத்திற்குள் வந்த முதல்வர் ஜெயலலிதா அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை தட்டில் வைத்து ருசி பார்த்துச் சாப்பிட்டார். சரி.



Sep 20, 2014

கீழணை & வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க, ஜெயலலிதா உத்தரவு




சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
 
கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்குச் சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து  தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 
 
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 
 
இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்க உத்தரவு!

23THJAYA_1307669f


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறந்து விட தான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பாசனத்துக்காக வீராணம் ஏரியில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு


வீராணம் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.21) முதல் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளை ஏற்று கீழணை, வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கோவையில் இடைதேர்தல் மோதல்: அதிமுக எம்எல்ஏ உள்பட175 பேர் மீது வழக்கு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவையில் மேயர் இடைதேர்தல் மோதல் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ. வேட்பாளர் உள்பட 175 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பா.ஜ. மேயர் வேட்பாளர் நந்தகுமார் நேற்று முன்தினம் தனது கட்சியினருடன் கோவை சவுரிபாளையம் மாரியம்மன் கோயில் மைதானம் அருகே காரில் சென்றார். அப்போது அங்கே தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி தலைவரின் கார் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த நந்தகுமார் மற்றும் கட்சியினர், வெளியூர்காரர்கள் தேர்தல் விதிமுறை மீறி தங்க கூடாது என்றனர்.இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து பாஜகவினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக  துடியலூர் டி.வி.எஸ் நகரை சேர்ந்த பா.ஜ., இளைஞரணி செயலாளர் கார்த்திக்கை (25) போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் மீதும் பொது சொத்துக்கு சேதம்  ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் நந்தகுமார் தந்த புகாரின் பேரில் போடிநாயக்கனூர் நகராட்சி சேர்மன் பழனிசாமி உள்பட 50 பேர் மீதும், பாஜக மாவட்ட துணை தலைவர் தாமு கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு பாரதி நகரை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ சின்னச்சாமி உள்பட 50 பேர் மீதும், பீளமேடு அதிமுக 65வது வார்டு அவை தலைவர் ஜெயகோபால் கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 25 பேர் மீதும், சவுரிபாளையம் தேர்வீதி அதிமுக நிர்வாகி வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என மொத்தம் 175 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ சாமியாத்தாள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தினால்தான் எஸ்.ஐ. மாற்றப்பட்டார் என்று பாஜகவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாமியாத்தாள் இட மாறுதலுக்கான முறையான உத்தரவு இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா அல்லது இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது