Sep 20, 2014

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்க உத்தரவு!

23THJAYA_1307669f


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறந்து விட தான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.