Sep 20, 2014

பாசனத்துக்காக வீராணம் ஏரியில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு


வீராணம் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.21) முதல் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளை ஏற்று கீழணை, வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.