May 31, 2020

திருச்சி தொடர்ச்சியாக முதியோருக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கி வருகிறார்.

                  

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

                
அதன் ஒரு பகுதியாக

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்

வெல்லமண்டி நடராஜன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு இலவச உணவு வழங்கினார்

கங்காரு கருணை இல்லத்தினை பார்வையிட்டார்.உடன் சாய் கோகுலம் தொண்டு நிறுவனம் சார்பாக 300 பொட்டலங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

 அமைச்சரிடம் கருணை இல்ல பயனாளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை *மருத்துவ வசதிகள்,*

கட்டணமின்றி தகனம் செய்ய மின்மயான அனுமதி மற்றும்

திருச்சிராப்பள்ளி சாலையோரங்களில் இருந்து மீட்கப்படும் நபர்கள் (1000 பேர் வரை தங்க வைக்கும்)


பராமரிப்பு கட்டிடம் கட்டுவதற்கான அரசுக்கு சொந்தமான நிலம் வேண்டும் என்ற கோரிக்கை மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது

 முதியோர் இல்ல பயனாளிகள் சார்பாக கொடுக்கப்பட்டது.கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உறுதி அளித்துள்ளார்


இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

May 23, 2020

திருச்சி ரம்ஜானை முன்னிட்டு முஸ்லீம்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்

திருச்சி 

மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
                   

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து தனது தொகுதி மக்கள் கஷ்டப்படாமல் இருக்க திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் மனிதநேயத்துடன் தனது தொகுதிவார்டு வாரியாக இலவசமாக சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறார்

                   
   

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 50 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 

தற்போது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வருகிறது அதற்காக ஏழை எளிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலவச பொருட்கள்

திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் மக்களை வரிசையாக சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமரச்செய்து ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

 நிவாரண தொகுப்பு பைகளில் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


 இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,வெல்லமண்டி சண்முகம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜாக்லின், மற்றும் சந்திரு, கணேஷ் உட்பட  சார்ந்த அதிமுகவை சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பகுதி தொகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

திருச்சி மே 23

திருச்சியில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு
மாவட்ட ஆட்சியர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று காலை 8.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் துறை கோட்டாச்சியர் விஸ்வநாதன் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்களின் நலன் கருதியும கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே
144தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் மற்றும் எந்த கட்சியினரும் அமைப்பும் 
கலந்து கொள்ள வேண்டாம் எனவும்,
மேலும், திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திகிறார்..

திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்

*திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் Covid-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்*


கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு  கடந்த மார்ச் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சாமானியர்கள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்.

இன்று திருச்சி மாவட்ட மத்திய வங்கியின் Covid-19 சிறப்பு கடனாக  நகைக்கடன் மிகக் குறைந்த வட்டியில் 58 பைசாவில் சுய உதவி குழுக்களின் மூலம் சிறப்பு கடன் வழங்கப்படுகிறது.

நகை கடன் திட்டத்தின் கீழ் கிராமிற்கு 3,000 ரூபாய் வீதம் 7% குறைந்த வட்டி வீதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு  ஒரு 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2660 குழுக்களும் சங்க அளவில் 1190 குழுக்களும் உள்ளது.

இதில் Covid-19 சிறப்பு கடன் உதவிக்கு தகுதியுள்ள 75 குழுக்களுக்கு ரூ62.50 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

May 22, 2020

திருச்சியிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் ஊருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டனர்

திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில் 
உள்ளதால் தமிழக முதலமைச்சர்  வெளிமாநில 
தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு 
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 15
மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த இராஜஸ்தான் மாநிலத்தை 
சேர்ந்த தொழிலாளர்கள் 773 நபர்கள் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் ரயில் 
நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து இரவு உணவு வழங்கி
சிறப்பு இரயில் மூலம் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (22.05.2020) அனுப்பி வைத்தார்

திருச்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்

*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 68 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 நபர்கள்
பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகைபுரிந்த 282 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டதில் 278 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 
நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க  வேண்டும்விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க  வேண்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை 
கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனைவரும் முழு 
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

திருச்சி மனிதநேய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நலத்திட்ட உதவிகள்

திருச்சி

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 45 நாட்களுக்கு மேலாத  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.


இன்று திருச்சி காஜப்பேட்டை தண்ணீர் தொட்டி
வளாகத்தில்
 பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர்லால் நேரு, வெல்லமண்டி சண்முகம், சந்து கடைசந்துரு, அமைச்சர் உதவியாளர்கணேஷ் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

திருச்சி பேரரசர் முத்தரையர் பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 தேதி
அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
செய்யப்படுகிறது.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள்
விழா அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு அறிவிப்பு

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் விழா
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும்  தெரிவித்ததாவது
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 144 – தடை உத்தரவு அமலில்
உள்ளதால் பொது மக்களின் நலன் கருதியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே வருகின்ற (23.5.2020) அன்று மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை
செலுத்துவார்கள். 144 – தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள்
கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஇவ்வாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 21, 2020

திருச்சி ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்கள் வழங்கினார்

திருச்சி 


 திருச்சியில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம் சமுதாய மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரண பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.


 கொரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பலர் வருவாய் இழந்து உணவன்றி ஏழை - எளியவர்கள், ஆதரவற்றோர் தவித்து வருகின்றனர்.


 அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பலர் அரிசி, காய்கறி ஆகியவற்றை உதவி செய்து வருகின்றனர். 


 இந்த வகையில் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று சையது முத்தரசா பள்ளியில் நிவாரண பொருட்களை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் ஜவஹர்லால் நேரு, வெல்லமண்டி சண்முகம், பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு,   பலர் கலந்து கொண்டனர்.