*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்
தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்*
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 68 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 நபர்கள்
பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகைபுரிந்த 282 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டதில் 278 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4
நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை
கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொது மக்கள் அனைவரும் முழு
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்