*தொடர் சேவையில் அரசு சித்த மருத்துவர்கள்*
தமிழ்நாடு அரசின் "ஆரோக்கியம்" திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர் இன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி , வயலூர் சாலை, குமரன் நகர்,சிவன் கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதில் மருத்துவர்கள் டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின் டோரோ, டாக்டர்.இசையமுது ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 5 மணிக்கு திருச்சி கீழபுலிவார் ரோடு ,ஆனந்தா அவென்யூ பூங்காவில் இதே போன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.