Feb 21, 2015

திருச்சி அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு

திருச்சி  அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர்  அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு தலைமை கொறாடா மனோகரன்,அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்,சட்ட மன்ற உறுப்பினர்கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்  

திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளரும் எம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை வகித்தார்.

திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனைகூட்டம்
ஜெயலலிதா பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது
மண்ணச்சநல்லூர்,பிப் ,21:
            அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67- வது பிறந்த தின விழாவைமுன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நெ.1 டோல்கேட்டில் நடைபெற்றது.
      கூட்டத்திற்கு திருச்சி ுறநகர் மாவட்ட கழக செயலாளரும் ம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை கித்தார்.
        மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சரும் திருச்சிமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளருமான டி.பி.பூனாட்சிஎம்பியும்மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் .குமார்,பெரம்பலூர் எம்,பி மருதராஜாமுன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமானஎன்.ஆர்.சிவபதிிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அம்மா பேரவைமாவட்ட செயலாளருமான தி.ராமுதிருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்ராசாத்தி ஆகியோர் சிறப்புரை வழங்கி ஆலோசனை வழங்கினார்கள்.
      மேலும் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் டி.இந்திராகாந்திஆர.சந்திரசேகர்,முன்னாள் அமைச்சர்கள் .பொன்னுசாமிஅண்ணாவிமுன்னாள் மாவட்டமாணவரணி செயலாளர் அறிவழகன் விஜய்ஒன்றிய செயலாளர்கள் டி.என்.டி.சூப்பர்நடேசன்,எம்.கே.ராஜமாணிக்கம்பொதுக்குழு உறுப்பினர்கள்டி.என்.ிவக்குமார்கே.ஜெயராமன்யூனியன் சேர்மேன்கள்நளாயினிநாகராஜன்என்.ஆர்.சேதுபதிதுணைச் சேர்மேன்வெற்றிச்செல்விதர்மலிங்கம், புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர்ஜேக்கப்அருள்ராஜ்மாவட்ட கவுன்சிலர் அரிசிமூக்கன்,எம்ஜிஆர் மன்ற மாவட்டமாணவரணி துணைச்செயலாளர் சிறுமருதூர் கதிரவன் ஆகியோர் கூட்டத்தில்பங்கேற்றனர்.

திருச்சி சிறுபாண்மை பிரிவு சார்பில் சிறப்பு பிரார்த்தனை

திருச்சி  கழக நிரந்தர பொதுசெயலாளர்  அம்மா 67 பிறந்தநாள்  சிறுபாண்மை பிரிவு சார்பில் சிறப்பு  பிரார்த்தனை மாவட்ட செயலாளர்  மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு  மீரான் தலைமையில் நடைபெற்றது  மற்றும் அவை தலைவர் வெல்லம் மண்டி நடராஜன் மற்றும்  நத்தர்ஷா  கவுன்சிலர்  ஆகியோர்  கழக உறுபினர்கள் கலந்து கொண்டனர் 

Feb 18, 2015

Feb 16, 2015

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தேர்தல் அ இ அ தி மு க வெற்றி கொண்டாட்டம்

திருச்சி  ஸ்ரீரங்கம்   சட்டமன்ற   தேர்தல் அ இ அ தி மு க  வெற்றி கொண்டாட்டம் தலைமை கொறடா மனோகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார் இனிப்பு வழங்கினார்கள் 

Feb 15, 2015

அமைச்சர் எஸ்.எஸ்.எம்.ஆனந்தன் நடத்திய பிரமாண்ட வாக்காளர் பேரணி

ஸ்ரீ ரங்கம் தொகுதி திருபராய்துறையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்த வாக்காளர் பேரணி எதிகட்சிகளை மிரள வைத்துள்ளது
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் எஸ்.வளர்மதியை ஆதரித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் தேர்தல் பெறுப்பாளரும் மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பராய்த்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகிகள் கடந்த  25 நாட்களாக வீடு, வீடாக சென்று அண்ணா தி.மு.க.வேட்பாளர் வளர்மதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிப்பின் இறுதி கட்டமாக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள ஊர்வலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அண்ணா தி.மு.க அரசின் 3 1/2 ஆண்டு சாதனைகள் எடுத்து கூறியும், ஸ்ரீ ரங்கம் தொகுதி மக்களுக்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய 14 பக்க கடிதத்தின் புத்தகங்களை வழங்கியும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் விலையில்லா 20 கிலோ அரிசியும், முதியோகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவிதொகையும், பள்ளி குழந்தைகளுக்கு மடிகணினி, சைக்கிள், புத்தகம் என 14 வகையான விலையில்லா பொருட்கள் வழக்கப்படுகிறது  மேலும் ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கு ரூ.400 கோடிக்கும் மேல் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் அவரது ஆட்சியில் நடந்துள்ளது. மேலும் பணிகள் நடைபெற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தார்.அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் துணை மேயர் சு.குணசேகரன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன்,நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம்,  வளர்மதி  கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், தனபால் ராஜேஷ்கண்ணா, திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் லதாசேகர், சடையப்பன், இளைஞர் அணி நீதிராஜன் அந்தநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் ஆகியோர்கள் சென்றனர்.
மகளிர் அணி மாநில துணைச்செயலாளரும் திருப்பூர் மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம், மாரியம்மன்கோவில் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில்  உள்ள நெல், கரும்பு, வாழை தோட்டங்களில் வேலை பார்க்கும் வாக்காளர்களிடம், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா பெண்குலம் காக்க பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார்.குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, வெண்மை புரட்சியை ஏற்படுத்த 2 கறவை மாடுகள், 24 ஆடுகள் வழங்கும் திட்டம், படித்த பெண்களுக்கு திருமணத்தின்போது திருமணத்திற்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் வரை உதவி தொகை, இப்படி எண்ணற்ற உதவிகளை வழங்கி வரும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெண்களான நாம் நன்றி கடன் பட்டு இருகிறோம்.அவரது கரத்தை வலுப்படுத்த இரட்டை இலை  சின்னததிற்கு  அதிகப்படியான ,வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும் என மேயர் விசாலாட்சி வாக்கு சேகரித்தார். மேயருடன் அன்னூர் அமுல்கந்தசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஈஸ்வரன்,மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ராஜ்குமார், பாசறை அன்பரசன், கவுன்சிலர் சத்தியா, கீதா,முன்னாள் கவுன்சிலர் ருக்குமணி, மாவட்ட பிரதிநிதி கோமதி, மகளிர் அணி நிர்வாகிகள் அமுதா சரஸ்வதி, சுந்தரம்பாள், மும்தாஜ் தலைமை கழக பேச்சாளர்கள் வேங்கை விஜயகுமார், பாரதிபிரியன் ஆகியோர் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் உடன் சென்றனர்.
அந்தநல்லூர் ஊராட்சியில் ஏழுமனூரில் வடக்கு தொகிதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், இலைகன்ர் அணி நகர செயலாளர் ஹரிகரசுதன், கவுன்சிலர்கள கணேஷ், கலைமகள் கோபால்சாமி மற்றும் வேலுமணி, அசோக்குமார், சாமிகணேஷ், மணிகண்டன், ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் எரியிட்டி சேகர் உள்ளிட்ட ஆகியோர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை வாக்களர்கள் மத்தியில் கலைநிகழ்ச்சி மூலம் எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அனலை பகுதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழு தலைவர் ஆர்.சாமிநாதன் ஆகியோர் தலைமையில் கரகாட்டம், ஒயிலாட்டங்கள்  நடத்தி வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பட்டுலிங்கம் மற்றும் முத்துரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருப்பராய்த்துரை ஊராட்சி அம்பேத்கார் நகரில் 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமையில் கவுன்சிலர்கள் பேபி தர்மலிங்கம், சண்முகம், வேலுசாமி, பிரியாசக்திவேல், மற்றும் ரத்தினகுமார், லோகநாதன் ஆகியோர்கள்  மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வீடு, வீடாக சென்று தாமார்களிடம் வழங்கி வேட்பாளர் வளர்மதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பெருகமணி பகுதியில் உள்ள காந்திநகர், மேட்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் தலைமையில்  மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜ், கரைபுதூர் ஊராட்சி தலைவர் நடராஜன், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பழனிசாமி, முன்னாள் துணை தலைவர் சூ.தர்மராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய துணைத்தலைவர் சிராஜ்தீன்,ஊராட்சி துணை தலைவர் அஸ்கர் அலி மற்றும் சி.டி.சி.பழனியப்பன், கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்  கடைவீதி, நெல் வயல்கள், வாழை தோட்டங்களில் சென்று வாக்காளர்களிடம் மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீ ரங்கம் தொகுதி வாக்களர்களுக்கு எழுதியுள்ள 14 பக்க புத்தகங்களை வழங்கியும், அண்ணா தி.மு.க.அரசின் 3 1/2 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
கடந்த 25 நாட்களுக்கு மேலாக திருபராய்த்துறை ஒன்றிய பகுதிகளில் முகாமிட்டு ஒவ்வொரு நாளும் வாக்களர்களை சந்தித்து அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கைகளாக உறவினர்களாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆணையினை ஏற்று வாக்கு சேகரித்து வந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் நேற்று 11 ம் தேதியுடன் இறுதி கட்ட பிரச்சாரம  மாலை 6 மணியுடன் முடிந்ததால் தங்களது ( திருப்பூர்) சொந்த ஊருக்கு செல்ல பயணமாயினர். அவர்களை பிரிய மனமில்லாமல் பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.