Dec 1, 2014

திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் அடுத்துள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில்



திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அண்ணா திமு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்க சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது மாவட்டபேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  அரசு கேபிள் டி,வி, நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் ஒன்றிய பேரவை செயலாளர் சிவலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி மயில்சாமி, உடுமலை நகரமன்ற துணைதலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருப்பூர் அ.தி.மு.க.சார்பில் பெருமாள் கோவிலுக்கு ரூ.5 லட்சம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நன்கொடையாக ரூ.5 லட்சத்து ஆயிரத்தை மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார்.
இதில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளரும், துணை மேயருமான குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், சோமசுந்தரம், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், சவுமீஸ் நடராசன், பலராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Nov 27, 2014

மக்கள் முதல்வரின் முக்கிய அறிவிப்பு















தலைமைக்கழக அறிவிப்பு.





Nov 26, 2014

தலைமை கழக அறிவிப்பு


திருப்பூர் மேயர் விசாலாட்சி ஆய்வு

திருப்பூர் பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவினை யொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு மற்றும் தூய்மைபடுத்தும் பணியினை மேயர் விசாலாட்சி பார்வையிட்டார்.
திருப்பூர் பெருமாள் கோவில் திருக்குட நன்னீராட்டுப் (கும்பாபிஷேக) பெருவிழா நடைபெறுகிறது. விழா தரிசனத்துக்காக பல்லாயிரக்காணக்கான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இங்குள்ள சாலைகளில்  ரூ.35 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால், தெரு விளக்கு, பேவர் பிளாக் கற்கள் பாதிக்கும் பணிகள்  என மாநகாட்சி சார்பில் நடைபெறுகிறது.பொதுமக்கள் மற்றும் பக்கதர்களின் வசதிக்காகவும், கோவில் விழா சிறப்பாக நடைபெறவும் மாநகராட்சி பணியாளர்களை துரிதமாக பணிகளை செய்து முடிக்க உத்த்ரவிடப்படுள்ளது. மேலும் கும்பாபிஷேக விழா நாளில் இப்பகுதியில் 4 இடங்களில் குடிநீர் தொட்டி, 4 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட உள்ளது. இத்துடன் பூ மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள  வீதி பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும், சுகாதாரம் பேணவும் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். கும்பாபிஷேக நாளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் செயல்படும்.இவ்வாறு மேயர் விசாலாட்சி கூறினார். 
இந்த ஆய்வின்போது ராஜ்குமார், முத்துக்குட்டி, பிரகாஷ், சரவணன்,உடன் 3-ம் மண்டல உதவி ஆணையாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, சுகாதார மேற்பார்வையாளர் பிச்சை, ஒப்பந்ததாரர் மந்திராச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி சார்பில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுவினால் பரவக்கூடிய



டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கும் வகையில் கொசுப்புழு உற்பத்தியினைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நோய் பரவுவதை தவிர்ப்பதற்காகவும், கோயம்புத்தூர் போன்ற பெறு நகரங்களில் முதிர்ந்த கொசுக்களை அழிக்கப் பயன்படுத்துகின்ற பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரம் போன்று, உடுமலை நகராட்சியிலும் மினி டெம்போ லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரத்தினை உடுமலை நகராட்சியின் சார்பாக நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் டாக்டர்.அருண், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன்,பி.செல்வம், சிவக்குமார், ஆர்.செல்வம் மற்றும் செல்வக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, பணியாளர்களைக் கொண்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை, 

திருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டி

ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி.வாசுதேவன் தலைமையில் தளி ரோட்டில் உள்ள போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க.புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜெகன்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிவாசகம், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சுந்தர்ராஜ், பேரவை நிர்வாகிகள் ரகுபதி, ராஜேந்திரன் வடிவேலு, போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி, கவுன்சிலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மடத்துகுளத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு மடத்துக்குளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த 40 இளைஞர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் நவீன கருவி மூலம் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுவடை செய்வது பற்றியும், பதநீர் இறக்கி, அதன்மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் தென்னையில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி தாக்குதல், நோய்கள் பராமரிப்பு மற்றும் களைச்செடிகள் பராமரிப்பு பற்றிய அனைத்து தொழில்நுட்பங்கள் பற்றியும், இவர்களுக்குத் தேவையான முதலுதவி, சிறுசேமிப்பு, தகவல் பரிமாற்றம், மது அருந்துவதால் ஏற்படும், தீமைகள், அதிலிருந்து மீள்வது பற்றிய கருத்துக்களும் வழங்கப்பட்டது.

இறுதி நாள் விழாவிற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர். சி.சண்முகவேலு தலைமை தாங்கினார். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு ரூ.3500 மதிப்புள்ள நவீன கருவி, ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டையும் வழங்கினார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் பெரியநாயகம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜெயமணி ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்க செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.