சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன் காவலர் தீக் குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிபவர் வேல்முருகன் (42). இவர் அலுவலக பணிக்காக சென்னைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தமிழக காவல்துறை டி.ஜி.பி. அலுவலக வாயில் முன் வேல்முருகன் காவலர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்தாராம்.அப்போது அவர் திடீரென, முதல்வர் ஜெயலலிதா வாழ்க, அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டப்படி தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி, தீ வைக்க முயன்றாராம். இதைப் பார்த்த அங்கு பாதுகாப்பு நின்றுக் கொண்டிருந்த வேல்முருகனை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரை, அங்கிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீஸார் நடத்தினர். தற்கொலைக்கு முயன்ற வேல்முருகன், காவலர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளாராம். இதில் சில போட்டிகளில் வெற்றி பெற்றபோது, ஜெயலலிதா அவருக்கு பரிசு வழங்கி, பாராட்டியுள்ளார். இதன் விளைவாக வேல்முருகன், ஜெயலலிதா அனுதாபியாக இருந்துள்ளார். இதன் காரணமாகவே ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடியாமல், அவரை விடுதலை செய்யக் கோரி, வேல்முருகன் தற்கொலைக்கு முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தால் டி.ஜி.பி. அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.