கோவையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மேயர் வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:-
தமிழக உரிமையை நிலைநாட்டுவதில் பா.ஜனதாவுக்கு அக்கறை இல்லை. தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட அ.தி.மு.க. அக்கறை எடுத்து வருகிறது.
உட்கட்சி பூசல் காரணமாகத்தான் பா.ஜனதா வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். உட்கட்சி பூசலை மறைக்க அ.தி.மு.க. மீது பழி போடுகிறார்கள்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய மின்திட்டங்களால் டிசம்பர் மாதத்திற்குள் கூடுதலாக 2430 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். புதிய மின் திட்டங்கள் மூலம் வரும் ஆண்டுகளில் 5723 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தமிழகத்தில் மின்தடை சரி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 110.65 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.