கோவை: தோல்வி பயத்தால் தான் பா.ஜ., வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெறுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். கோவை மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதல்வர் ஜெ., பேசுகையில், பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னைகள் உள்ளன. கர்நாடக மக்கள் விட்டுபோய்விடுவார்கள் என பா.ஜ., அச்சப்படுகிறது. காவிரி விவகரத்தல் பா.ஜ., மவுனமாக உள்ளது. தோல்வி பயத்தினால் பா.ஜ., வேட்பாளர்கள் வாபஸ் பெறுகின்றனர். ஆனால் வேண்டுமென்றே அதிமுக மீது பொய் குற்றச்சாட்டு கூறுகின்றனர். ஜனநாயகத்தை மதிப்பவர்கள் நாங்கள். எப்போதும் மக்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மக்கள் பிரச்னையை எதிர்கொண்டு வெற்றி பெறும் ஒரு இயக்கம் அ.தி.மு.க.,. தேசிய கட்சிகள், சுயேட்சைகளுக்கு ஒடடு போட்டால் எந்த பலனும் இல்லை. எதிரிகளுக்கு அரசீயல் இருந்து ஒய்வு கொடுத்துள்ளீர்கள். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். தமிழர்களுக்கு ஆதரவு தரும்ஒர இயக்கம் அ.தி.மு.க., என பேசினார்.