கோவை வ.உ.சி. பூங்காவில் அதிமுக மேயர் வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழக உரிமையை நிலைநாட்ட பாஜகவுக்கு அக்கறை இல்லை. தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உட்கட்சி பூசலால்தான் பாஜக வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெறுகிறார்கள். உட்கட்சி பூசலை மறைப்பதற்காக அதிமுக மீது பாஜக பழி போடுகிறது.
தமிழகத்தில் மின்தடை சரிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் மூலம் 2430 மெகாவாட் மின்சாரம் டிசம்பருக்குள் கிடைக்கும். புதிய மின்திட்டங்கள் மூலம் வரும் ஆண்டுகளில் 5,723 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகரத்தல் பா.ஜ., மவுனமாக உள்ளது. தோல்வி பயத்தினால் பா.ஜ., வேட்பாளர்கள் வாபஸ் பெறுகின்றனர். ஜனநாயகத்தை மதிப்பவர்கள் நாங்கள். எப்போதும் மக்களை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.