Sep 15, 2014

பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோல்வி பயத்தால் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்: ஜெயலலிதா




தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற 18–ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேசியை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று அங்கு பிரசாரம் செய்தார். 

இந்த நிலையில்,  வ.உ.சி.பூங்கா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து அவர் பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோல்வி பயத்தால் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.மேலும் அவர் பேசியதாவது:-காவிரி பிரச்சினையில் தீர்வு காண பாஜக  அரசு  எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சிக்கு கர்நாடகத்தில் தனி வாக்கு வங்கி உள்ளதாலே நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. காவிரி  பிரச்சினையில் பாஜக அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. தேசிய கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் வாக்களிப்பதால் எந்த பலனும் இல்லை. தேசிய கட்சிகளுக்கு கோவை மக்களை பற்றி கவலை இல்லை. மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன