நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டில் அதிமுக சார்பில் T. ரேணுகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்த ரேணுகா தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது 15வது வார்டுக்கு உட்பட்ட சிந்தாமணி, பூசாரி தெரு, பதுவை நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று,
அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்தது.
வாக்கு சேகரிப்பின் போது ரேணுகா பொதுமக்களிடம் பேசுகையில்...
தான் வெற்றி பெற்றவுடன் 15-ஆவது வார்டு மக்களின் நீண்டநாள் பிரச்சினையான சாக்கடை பிரச்சனை சரி செய்யப்படும். மேலும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்து தரப்படும். இது போன்ற மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு வழங்கிட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வாக்கு சேகரிப்பின் போது 15வது வார்டு பிரதிநிதி காலனி தங்கவேல், வட்டச்செயலாளர் பொன் அகிலாண்டம், துணை செயலாளர்
DG.தர்மலிங்கம், அவைத்தலைவர் ஊறுகாய் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், இணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் மீனா சுப்பிரமணி, மற்றும் பிரதிநிதிகள் சகாயராஜ், போட்டோ கிருஷ்ணன், பெட்டிகடை சங்கர்,
N.பாண்டுரங்கன், G.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.