Mar 19, 2021

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் வாக்குறுதி

 திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் பரஞ்ஜோதி இன்று சமயபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஒவ்வொரு நாளும் நிர்வாகிகளை சந்தித்து வந்த நிலையில் இன்று முதல் முதலாக சமயபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய்,  வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்



காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்


கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்


மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்


விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில்  இருந்து

ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்


மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்


கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்



மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்


சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்


கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்



மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்



அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்


இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்



உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்

மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில்  முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்


இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சமயபுரம் சின்னையன் ஒன்றிய செயலாளர் ஆதாளி ஜெயக்குமார் ஆமூர் ஜெயராமன் நகரச் செயலாளர் மண்ணச்சநல்லூர் துறை சக்திவேல் சமயபுரம் சம்பத் மற்றும்  பா.மா.கா தா.மா.ககூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சமயபுரம் பகுதியில் தீவிர பிரசாரத்தில்   ஈடுபட்டனர்.

Mar 18, 2021

திருச்சி ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் கு.பா.கிருஷ்ணன் பேச்சு

 மத்திய மாநில அரசினால் வழங்கப்படும் நிதியை ஸ்ரீரங்கம் மக்களுக்கு முழுமையாகப் பெற்று தந்து ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தேர்தல் பரப்புரை.


ஜீயபுரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில்  முன்னாள் அமைச்சர் *கு ப  கிருஷ்ணன்* நேற்று காலை  ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்பகுதியில் உள்ள மக்களிடம் வாக்கு 

சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசுகையில்

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா வழியே வந்த எடப்பாடி K. பழனிச்சாமி ஆட்சியை தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையை ரவுடியிசங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற நிலையில் தான் தமிழகம் உள்ளது .தமிழகத்தை கூறுபோடும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகிறது.திருச்சி மாவட்டத்தில் கட்சிக்கு தலைமையாக உள்ள கே. என். நேரு 12 ஆண்டு காலம் அமைச்சராக உள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின்போது அமைச்சராக 5 ஆண்டு காலம் மட்டுமே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் .அச்சமயம் 42 லட்சம் மதிப்பிலான மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.பின்னர் வந்த திமுக ஆட்சியில் அதற்கு கீழே விசுவநாதன்  மருத்துவக்கல்லூரி என பெயர் மட்டும் சூட்டப்பட்டது.திமுக கட்சியில் இருக்கும் ஸ்டாலின் தன்னைத்தானே செயல் தலைவர் என கூறிக்கொள்கிறார்.எதிர்க் கட்சியான திமுக  தகுதியை வளர்த்துக் கொண்டு  அதிமுகவிடம் போட்டி போடவேண்டும்.மேலூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் சாலை கழிப்பிடம் மற்றும் பாலம் அமைத்து தரப்படும் எனவும் கூறினார்.அதனைதொடர்ந்துஸ்ரீரங்கம் நெடுந் தெருவில் பிரசார பயணத்தை மேற்கொண்ட வேட்பாளர்  மக்களிடம் கூறுகையில் திருவரங்கத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.

திருவரங்கத்தை புனித நகரமாக மற்றி மத்திய அரசினால் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பெற்று தரப்படும் என்று கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.


இந்த நிகழ்ச்சியல் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன்,திருப்பதி,ஒன்றிய கழக செயலாளர்கள்முத்துகருப்பன்,அழகேசன்,ஜெயகுமார்,நடராஜ்செல்வராஜ்,கூட்டனி கட்சி தலைவர்கள்பா.ஜ.க.மாவட்ட தலைவர்ராஜேஷ்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 திருப்பட்டூர், சனமங்களம், சீதேவிமங்களம் ஆகிய ஊராட்சிகளில்  மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர் புல்லட் ஜான் மற்றும்  வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

திருச்சி முசிறி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் .


இதை தொடர்ந்து இன்று மாலை முசிறி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வேட்பாளர் செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


மேட்டுப்பாளையம், மோருப்பட்டி, கவராப்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.


இந்த பிரச்சாரத்தின்போது தாத்தையங்கார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயம், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், பேரூராட்சி செயலாளர் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் செம்மலை, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், அங்கமுத்து, மகாராஜன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் ரூபன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் கவி அரசு, தா.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய மகேந்திரன், தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திவாகர், மேட்டுப்பாளையம், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுதாகர், ஒன்றிய துணைத் தலைவர் பொன்மனச்செம்மல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்ற வேட்பாளர் செல்வராஜ் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்

திருச்சி மண்ணச்சநல்லூர்அதிமுக வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது

 மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தனது வேட்புமனுவை அதிமுக சார்பில் தாக்கல் செய்தார்

இந்நிலையில் இன்று மண்ணச்சநல்லூர் பேருந்து நிலையம் அருகே வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.

புதிய அலுவலகத்தை பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Mar 17, 2021

திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வேட்புமனு தாக்கல்

 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிஅதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி் வேட்புமனுத்தாக்கல்


 


    திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்அதிமுக திருச்சி  வடக்கு மாவட்டசெயலாளருமான முபரஞ்ஜோதி் தனதுவேட்புமனுவை மண்ணச்சநல்லூர் வருவாய்வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும்அலுவலர் ராமன் அவர்களிடம் தாக்கல்செய்தார்.

 

முன்னதாக  மண்ணச்சநல்லூர் எம்ஜிஆர்சிலையிலிருந்து அதிமுகபாமகபாஜக,தமாக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிநிர்வாகிகள்தொண்டர்கள் புடைசூழஊர்வலமாக வந்த அவர்

மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் ராமன்அவர்களிடம் தனது வேட்புமனுவைவழங்கினார்.

மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன்இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதிஎன்பதால்வேட்பாளர் மு.பரஞ்ஜோதியுடன்தமாக வடக்கு மாவட்ட தலைவர் கே.வீ.ரவீந்திரன்பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ்,  பிஜேபி விவசாயஅணித் தலைவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர்உடன் இருந்தனர்.

Mar 15, 2021

திருச்சி அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

 திருச்சி

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுகவினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.



ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்



தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது

பின்னர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் டைமன் திருப்பதி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார்

 திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் அதிமுக திமுக கழக தொண்டர்கள் பனையபுரம் கண்ணன் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி பகுதி கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் சந்திக்க குவிந்த கட்சி நிர்வாகிகள்

 திருச்சி


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


 அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.


இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அல்லூர் குழுமணி பெட்டவாய்த்தலை வயலூர் அருகே அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்