மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனது வேட்புமனுவை அதிமுக சார்பில் தாக்கல் செய்தார்
இந்நிலையில் இன்று மண்ணச்சநல்லூர் பேருந்து நிலையம் அருகே வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.
புதிய அலுவலகத்தை பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.