Mar 15, 2021

திருச்சி அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

 திருச்சி

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுகவினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.



ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்



தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது

பின்னர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் டைமன் திருப்பதி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார்

 திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் அதிமுக திமுக கழக தொண்டர்கள் பனையபுரம் கண்ணன் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி பகுதி கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் சந்திக்க குவிந்த கட்சி நிர்வாகிகள்

 திருச்சி


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


 அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.


இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அல்லூர் குழுமணி பெட்டவாய்த்தலை வயலூர் அருகே அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்

Mar 14, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் திருவானைக்காவலில் நிர்வாகிகள் ஆதரவைப் பெற்றார்

 


திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் திருவானைக்காவலில் அதிமுக.வினரிடம் ஆதரவு திரட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் வடக்கு வீதி சங்கரமடம் அருகே கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் சால்வை அணிவித்து ஆதரவு கோரினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பனையபுரம் கர்ணன் பகுதி செயலாளர்கள் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 13, 2021

திருச்சி அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் கு.ப.கிருஷ்ணன்

 வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் கு.ப.கிருஷ்ணன்


திருச்சி அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கு.ப.கிருஷ்ணன் இன்று ஸ்ரீரங்கம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள நெடுந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

ஆதரவு கேட்டு சென்ற இடங்களில் கு.ப.கிருஷ்ணனுக்கு கட்சி நிர்வாகிகளும், அவர்களது குடும்பத்தாரும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

Mar 12, 2021

திருச்சி அதிமுகவினருக்கு தேநீர் பரிமாறிய மனிதநேய அமைச்சர்

 திருச்சி

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் தரிசனம் முடித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டீக்கடையில் கட்சிக்காரர்களுக்கு டீ, சாம்பார் விநியோகம் செய்தார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ர6ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சார வியூகங்கள் பலவிதங்களில் இருக்கும்.


இறுதி எஜமானர்கள் வாக்காளரகள் தான் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் இத்தகைய பிரச்சார வியூகங்களை திட்டமிட்டு மேற்கொள்வார்கள்.

பேருந்துகளில் பயணம் செய்வது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது போன்ற பல்வேறு யுகத்திகளைக் கையாள்வார்கள்.

சாதாரண பாமர மக்களை கவரும் வகையில் இத்தகைய பிரச்சாரங்கள் அமையும்.

இவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டால் வேட்பாளர் சாதாரணமான, எளிமையான நபர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும்.

இந்த வகையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் கலந்து கொண்டு விநாயகரை வணங்கிய வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை நுழைவு வாயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

என்எஸ்பி ரோடு, நந்தி கோவில் தெரு ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் டீக்கடைக்கு கட்சியினருடன் டீ குடிக்க சென்றார்.

அவருடன் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் சென்றனர்.

அப்போது டீ கடையில் வேலை செய்யும் மாஸ்டர் டீ போட்டு கண்ணாடி டம்ளரில் ஊற்றி விநியோகம் செய்ய தயாராக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வெல்லமண்டி நடராஜன், மாஸ்டரை கீழே இறங்கச் சொல்லிவிட்டுடீ பட்டறையில் ஏறினார்.

கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த டீயை கட்சியினருக்கு விநியோகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து டீக்கடை வாசலில் உள்ள பலகாரக் கடை கல்லா பெட்டியில் ஏறி நின்ற அமைச்சர், கட்சியினர் சாப்பிட்ட வடை, போண்டா போன்ற பலகாரங்களுக்கு சாம்பார் ஊற்றி சாப்பிட செய்தார்.

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு

 அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பிரம்மாண்டமான  வரவேற்பு


திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

 இரவு சுமார் 10 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது,தொண்டர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்து.வெல்லமண்டி நடராஜன் வரவேற்பளித்தனர்.

மேலும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரான பத்மநாதன் விமான நிலையத்திற்கு சென்று வெல்லமண்டி நடராஜன்  அவர்களை வரவேற்றார்

மேலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் ஜவகர் ,சுரேஷ் குப்தா, அன்பழகன்,கழக நிர்வாகிகள் மகளிர் அணி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Mar 11, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அதிமுக தொண்டர்கள் வெள்ளத்தில்



ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்று வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போதும் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சென்னையில் இருந்து கு.ப.கிருஷ்ணன் திருச்சி வந்தார்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு கு.ப.கிருஷ்ணன் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி  பனையபுரம் கர்ணன் அதிமுக பிரமுகர்கள் மகளிர் அணி செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் அதிமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு அருள்வாக்கு

 திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு பத்மநாதன்   என்கிற வேட்பாளர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .


அவர் புத்தூர் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக அதிமுக கட்சி பிரமுகர்களை சந்தித்தார் அப்போது இறை வழிபாடு நடத்தப்பட்டது .


திடீர்னு ஒரு நபர் பத்மநாதன் இடம் 11837 ஓட்டு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று  அதிமுக கட்சி சார்ந்த நபர் ஒருவர் இறை வாக்குறுதி அளித்தார்.

 இதனால் பரபரப்பாக காணப்பட்டது மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கோட்டையாக இருக்கும் நிலையில் இப்படி இறை வாக்குறுதியால் பரபரப்பு காணப்பட்டது. விரைவில் அதிமுக கோட்டையாக மாறும் என்ற மன உறுதியில் அதிமுகவினர்.