Nov 11, 2014

தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிஅரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் பெற வழி வகை செய்தவர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.

தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், ரோட்டரி சங்க தலைவர் ரத்தினசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கி பேசியதாவது:-
வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கும் திட்டத்தை திருப்பூரில்  வைத்திருக்கிறார்கள். இது ஒரு முன் மாதிரியான திட்டமாகும். இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும்  துவக்கப்படும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான், தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதற்காக சுகாதார திட்டங்களுக்காக ரூ.8 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கி, அரசு மருத்துவமனைகளிலே அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.காச நோய் தொற்று நோய் அல்ல.உரிய சிகிச்சைகளை மேற்கொண்டால் அந்த நோய் குணமாகும். 
நோயாளிகள் நல்ல சத்துணவு சாப்பிட வேண்டும்,பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என்பதற்காக தான் இன்றைக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுகாதரத்துக்காக பல்வேறு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு வருடம் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 400 பேர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் சுகாதார நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்,இணை இயக்குனர் டாக்டர்.கேசவன், துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி, மருத்துவ அறிவியல் துறை துணை இயக்குனர் பொன்னுசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா  சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பூலுவபட்டி பாலு, ரோட்டரி நிர்வாகிகள் சிறீதரன், முத்துசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் கே.செல்வம், எம்.கண்ணப்பன், சண்முகசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கினார்.அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
 

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர்

தென்னை வளர்ச்சி விதை நாற்று பண்ணையில் சட்டமன்றதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.சண்முகவேல் எம்.எல்.ஏ.,சி.மகேந்திரன் எம்.பி.ஆகியோர் தென்னை கன்றுகளை நடவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம்,விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயமணி, ராம்குமார், கள அலுவலர் தீப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் அரசு விதைப்பண்ணையில் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்  மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் தேவணம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை 39 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இந்த பண்ணையில் தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.51.5லட்சம் செலவில் 1.5 மெட்ரிக் டன் திறனுடைய புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளாளவு கொண்ட கிடங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றரை லட்சம் லிட்டர் கொள்ளாளவு தரைமட்ட தண்ணீர் தொட்டியில் 1500 மீன் குஞ்சுகள் வளர்க்க விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் 7ஏக்கர் நிலப்பரப்பில் மக்காசோளம் மற்றும் சோளம் பயிரிட விதைகள் விதைக்க தயார் நிலையில் உள்ளது. நீண்ட காலமாக பயன்பாடு இன்றி இருந்த இப்பண்ணையை  தமிழக முதலவராக ஜெயலலிதா 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு முதல் செயல்பட துவங்கி ரூ.1,96,712 லாபம் ஈட்டியுள்ளது. இப்பண்ணைய வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.அப்போது இப்பண்ணையில் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் சின்னவெங்காயம் ஆராய்ச்சி மையம்,தென்னை நாற்றுப்பண்ணை அமைக்க உத்தரவிட்டார். பின்னர் பண்ணையில் தென்னங்கன்று நட்டார். பொங்கலூர் அரசு விதைப்பண்ணையை சீரமைப்பு செய்து லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மற்றும் வேளாண்மை துறையினரை பாராட்டினார். 
இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட  கலெக்டர் ஜி.கோவிந்தராஜன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஒன்றிய தலைவர் எஸ்.சிவாச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல்,பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி,வேளாண்மை துறை இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன்,  துணை இயக்குநர்கள் அல்தாப், மகேந்திரன், பொங்கலூர் வேளாண்மை அலுவலர் வசந்தாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காசோளம் வெட்டும் இயந்திரம் அதிக அளவில் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று வேளாண்மை துறை அமைச்சரிடம் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.அது பற்றி பரிசிலனை செய்வதாக  வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார்.திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உள்ளார்.


Nov 10, 2014

tirupur msm ananthan minister news







Nov 9, 2014

மக்கள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்காமல் உயிர் நீத்த 6 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.18 லட்சத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினர்.

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்கி கொள்ள இயலாமல் அகால மரணமடைந்த திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம், வெள்ளசெட்டிபாளையத்தைச் சேர்ந்த எம்.பழனியின் மகன் சண்முகத்திடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், உடுமலையை அருகே உள்ள நரசிங்கபுரம்பகுதியை சேர்ந்த அண்ணா தி.மு.க.பிரமுகர் என்.வீரமணி என்பவர்  தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையையும், மடத்துக்குளம் தொகுதி, உடுமலை ஒன்றியம், தும்பலப்பட்டியைச் சேர்ந்த பி.கருப்புசாமி என்பவருக்காக அவருடைய மனைவி மஞ்சுளாவிடம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலையையும், உடுமலை தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்பாயத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பானுமதியிடம் ரூ.3 லட்சம் உள்ளிட்ட 6 குடும்பங்களுக்கு அண்ணா தி.மு.க.சார்பில் ரூ.18 லட்சத்தை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்,கேபிள் டி.வி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் எம்.பி.,சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நகராட்சி துணை தலைவர் எம்.கண்ணாயிரம் ஆகியோர் வழங்கினர்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல்லடம் பரமசிவம் எம்.எல்.ஏ.,அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் எம்.சண்முகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச்செயலாளர் கே.சுகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் ப.நடராஜன், தமயந்தி மாசிலாமணி, வாசுதேவன்,,மாவட்ட இணைசெயலாளர் ஜோதிமணி, மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி, குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, உடுமலை நகரமன்றத் துணைத்தலைவர் எம். கண்ணாயிரம், பல்லடம் வைஸ் பழனிசாமி, ஊராட்சிமன்றத்தலைவர்கள் மாசிலாமணி, ஜனார்த்தனன், வீராச்சாமி, கரைபுதூர் ஏ.நடராஜன், கே.ஆர்.பி.பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மயில்சாமி, நந்தகுமார், திலீப்குமார் பனியன் துரை மற்றும் அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Nov 8, 2014

திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்

திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்
திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள காரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, இவர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தது மரணம் அடைந்தார்.
ராமசாமி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மேயர் ராஜன்செல்லப்பா உள்பட மாநிலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
இதில் சிறுபான்மை பிரிவு ஜான்மகேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், யூனியன் சேர்மன்கள் திருச்செல்வம், தமிழழகன், மகாலிங்கம், நகர செயலாளர்கள் விஜயன், நாகராஜன், நெடுமாறன், துணை சேர்மன்கள் பாவடியான், சதீஷ் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதிமுக சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

 
மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு மனமுடைந்து அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்க மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவின் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார் .உடன் கழக நிர்வாகிகள் ..

பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் மலிவு விலை காய்கறிகள் ரூ.14 கோடிக்கு விற்பனை: அமைச்சர் தகவல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

பொது மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறையால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 210 மருந்தகங்களுடன் நடப்பு ஆண்டில் புதியதாக 100 அம்மா மருந்தகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு, தற்போது 17 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த 100 மருந்தகங்களுக்கும் கட்டமைப்பு வசதிக்காக ரூ.20 கோடி மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனையில் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெளிச்சந்தையில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்ட 53 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 31 வகையான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன. 2.11.2014 வரையில் 48,45,104 கிலோ டன் காய்கறிகள் ரூ.13.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோட்ட பயிரிடுவோருக்கு கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக ரூ.147.08 கோடி அளவிற்கு காய்கறி சாகுபடி கடன் வழங்கப்பட்டுள்ளது.