பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி 41 வது வார்டில் அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஸ்கர்.
இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று தனது 41 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், காந்தி நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாஸ்கர் பொதுமக்களிடம் பேசுகையில்......
நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வாக்கு சேகரிப்பின் போது அபிமன்யு, அன்பு துறை, ராஜேந்திரன், ஆனந்தகுமார், எம்.சேகர், தீன் என்கிற அமீர் முகமது, ரூபாவதி, செல்ல பாப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.