Feb 10, 2022

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்



 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 03 வது  வார்டில் அதிமுக சார்பில் ரேவதி போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த ரேவதி தனது வார்டுக்குட்பட்ட கீழ அடையவளஞ்சான் தெரு, தேவி தெரு, காந்தி ரோடு, கிழக்கு ரங்கநாதபுரம், ரயில்வே குடியிருப்பு, ராஜாஜி தெரு, விக்னேஷ் பிளாட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



அப்பகுதியில் பிரபலமான இவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் ரேவதி பொதுமக்களிடம் கூறுகையில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தி தரப்படும். அரசிடம் இருந்து கிடைக்கக்கூடிய சலுகைகள் தனது வார்டு மக்களுக்கு பெற்று தரப்படும். மேலும் எண்ணற்ற திட்டங்களை தனது வார்டில் செயல்படுத்த பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவரியார், கலைவானன், கிருஷ்ண வேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.