Feb 12, 2022

திருச்சி 55 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு பிரச்சாரம்

 


திருச்சி மாநகராட்சி 55-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு பிரச்சாரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி  மாநகராட்சி 55-வது  வார்டு உறுப்பினர் பதவிக்கு  அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட A. ஜோசப் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று  தனது வார்டுக்குட்பட்ட பொன்நகர், சேட்டு காலனி, காந்தி நகர்  உள்ளிட்ட  பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது

ஜங்சன் பகுதி மாணவரணி செயலாளர் கருமண்டபம்  P.வெங்கடேசன்,  வட்டச்செயலாளர் அமீர், வட்ட துணை செயலாளர் செந்தில், மற்றும் D.மனோகர், பெங்களூர் ஜான் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.