Mar 23, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெங்காய தரகு மண்டி வியாபார சங்க தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வெங்காய தரகு மண்டி வியாபார சங்க தலைவர் வெள்ளையப்பனிடம் ஆதரவு கோரினார்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா  மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 22, 2019

திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதரிடம் ஆதரவு கோரினார்..

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதரிடம் ஆதரவு கோரினார்..திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பண்ணையார் பிரேம்குமார் நாகநாத சிவகுமார் வழக்கறிஞர் சரவணன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்

திருச்சி ஜே ஜே பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி
ஆண்டு விழா – 2019


ஜெ. ஜெ. பொறியியல் கல்லூரியின் 2019-ம் ஆண்டு விழா 22-03-2019 (வெள்ளிகிழமை) அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பிறகு யோகா மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கப்பட்டது.  செல்வன். னு. கெவின் ஜார்ஜ் நான்காம் ஆண்டு கணினி துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார்.  நம் கல்லூரி முதல்வர்           முனைவர். ளு. சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.  இக்கல்வி ஆண்டின் மாணவர்களின் சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். னுச. ளு. ராமமூர்த்தி செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் அவர்கள் முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்தார்.  ஆச. பு. ரவிச்சந்திரன் இணை செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் ஆச. யு.மு.மு ரவிச்சந்திரன் நிதிநிலை கட்டுப்பாட்டாளர் ஜெ.ஜெ. கல்விக் குழுமம்அறங்காவலர்கள்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் மற்றும் நம் கல்ல}ரியின் செயல் இயக்குநர் முனைவர். வு. சிவசங்கரன் ஆகியோர் விழா உரையாற்றி சிறப்பித்தார்கள்.


இந்த வருட ஆண்டு விழாவின் சிறப்பம்சம் நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் அவர்கள் நம் கல்லூரியின் முன்னாள் இயந்திரவியல் துறை மாணவர் என்பதே ஆகும்.
நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் கார்னியான்ஸ் தொழிற்சாலை பெரம்பலூரில் நிறுவனராக உள்ளார்.  சிறப்பு விருந்தினர் தனது உரையில் யோகா மாணவர்களை பாராட்டிää ஒரு அழகான மேற்கோளை சொல்லி தனது உரையை துவக்கினார்.  அந்த மேற்கோள் “கல்வி என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும்இ வாழ்க்கை அதற்கு மேலும் உள்ளது” என்று கூறிவிட்டு இக்கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்து இன்று இந்த கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.  மேலும் தனது உரையில் மாணவர்களை பார்த்து நீங்கள் வேலை தேடுவதை விட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயருங்கள் என்று கூறினார்.  மேலும் மாணவர்கள் தங்கள் அறிவு திறனை வளர்த்து ஒரு சிறந்த தொழில் முனைவராக தங்கள் எதிர்கால வாழ்க்கையில் விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அடுத்ததாக  தனது உரையில்  தானும் ஆரம்பகாலங்களில் தொழில் முனைவராக இருந்தபோது பலவிதமான தோல்விகளையும் சங்கடங்களையும் சந்தித்ததாகவும் தனது தொடர் முயற்சி மற்றும் கடின  உழைப்பாலும் ஒரு சிறந்த  வெற்றி பெற்ற தொழில் முனைவராக விளங்குவதாக கூறினார்.  தன்னுடைய நிறுவனத்தில் 92  பேர் பணி புரிவதாக பெருமையுடன் தெரிவித்தார்.   மேலும் அவர் மாணவர்கள் தொழில்; முனைவராக  ஆவதற்கு பல விதமான ஆலோசனைகளை வழங்கினார். தனது உறையின் இறுதியில் பார்வையாளர்களை கேள்விகள் கேட்க செய்து அனைத்திற்கும் அழகான விரிவான பதில்களை வழங்கினார்.  நம் சிறப்பு விருந்தினரின் உரை மாணவர்களை மிகவும் ஊக்குவிப்பதாக இருந்தது.
விழாவை 210 மாணவ மாணவியருக்கு கல்வி மற்றும் பல்துறை சாதனைகளுக்காக பரிசுகள் வழங்கப்பட்டன.  நம் கல்லூரியின் கலைத்துறை மாணவர்கள் பல்வேறு விதமான கலை நிகழ்சிகளை மிகவும் அழகாக செய்து காட்டினர்.  நம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்ணணுவியல் துறை மாணவி எஸ். ஜே. ஜாஃப்ரின்  நன்றியுரை வழங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பேராயர் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தார்



அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார் சிஎஸ்ஐ திருச்சபை பேராயர் சந்திரசேகரன் அவர்களிடம் சந்தித்து ஆசி பெற்றார்


 திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் வழக்கறிஞர் சரவணன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பல நிர்வாகிகள் ஆதரவு கோரினார்கள்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்




 அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்


அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வரகனேரி  அல்முஹம்மதியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்களிமும் அவைத் தலைவர் ஹாஜி அல்லாஹ் மஸ்ஜித் இமாம் பஸ்ஸின் தாவூது ஆகியோரிடம் ஆதரவு கோரினார் .


திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் sdpi சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைவர் அரசன் செயலாளர் ரபீக் முபாரக் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா வழக்கறிஞர் அணி இணைச் செயலர் கோபி செழியன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் இலக்கிய அணி செயலாளர் வரதராஜன் பொறியாளர் அணி செயலர் விக்னேஷ் உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Jan 27, 2019

திருச்சி ஸ்ரீரங்கம்ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா



ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். 



ஆண்டவன் ஆசிரம தேசியத்தலைவர் ராஜகோபால் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்களையும் கல்லூரியில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  இயக்குனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார் துணை முதல்வர் பிச்சைமணி நன்றி கூறினார்

Dec 2, 2018

விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது

திருச்சி  02.12.18

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த 150 பயணிகள் உயிர் தப்பினர், அவர்களை திருச்சி தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் திருச்சியில் சமீபகாலமாக விமான கோளாறு, விமான விபத்து என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்



*விமான நிலையத்தில் 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல்*

மலேசியா, துபாயிலிருந்து இரவு வந்த விமானத்திலும், இன்று காலை  சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினம் சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.

Dec 1, 2018

கைத்தறி சிறப்பு கண்காட்சி

திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.


இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.