Mar 3, 2015
பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலம் நவக்கிரக கோட்டை கோவிலில்
மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நீடூழி வாழ வேண்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு யாகம், அபிஷேக பூஜை சங்கு பூஜை மற்றும் விளக்கு பூஜை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,ஒன்றியகுழு தலைவர் ஆறுமுகம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாச்சலம், ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, ஊராட்சி மன்ற தலைவர் அப்புசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.,
பல்லடம் ஜெயலலிதா பேரவை சார்பில் 5 ஆயிரம்பேருக்கு அன்னதானம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினர்.
திருப்பூர் அடுத்துள்ள பல்லடம் அண்ணா தி.மு.க.நகர ஜெயலலிதா பேரவை சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சர்வ மத கூட்டு பிரார்த்தனையுடனும் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பரமசிவம் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்ட உதவிகளையும்,,அன்னதானமும் வழங் கினர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீடூழி நலமுடன் வாழவும், அவர் வழக்கில் இருந்து விடுபட்டு, மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டியும், கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடு கோவில்களில் நடைபெற்றது. மேலும் பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 1067 பேருக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் 5067 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா, நகர ஜெயலலிதா பேரவை தலைவரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வைஸ் பி.கே.பழனிசாமி ஏற்பாட்டின் பேரில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம் ,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், மாவட்ட கழக இணைச்செயலாளர் ஜோதிமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் துரைக்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், வழக்கறிஞர் வெங்கடாசலபதி, துணை செயலாளர் பாரதி செல்வராஜ், வார்டு செயலாளர் யவன கதிரவன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, இளைஞர் அணி சதீஷ்குமார்,மகளிர் அணி ஞானாம்பிகை ,வெண்ணை சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன், அருணாசலம், ரபிக் அஹமது, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது. பல்லடம் நகர ஜெயலலிதா பேரவை சார்பில்ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டஅமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந் தன், பரமசிவம் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு\,பொதுமக்களுக்கு அன்னதா னமும் வழங்கினர்.
திருப்பூர் புதிய வடக்கு காவல் நிலையம் கட்ட அடிகல் நாட்டு விழா அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு
திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திகு ரூ.1.40 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை விழாவை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இன்று காலை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், துணை ஆணையாளர்கள் திருநாவுக்கரசு, சண்முகவடிவேலு, உதவி ஆணையாளர்கள் தங்கவேலு, குணசேகரன், மணி மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Mar 2, 2015
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் ரூ. 36 லட்சம் செலவில் பூங்கா மற்றும் கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் ரூ. 36 லட்சம் செலவில் பூங்கா மற்றும் கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், கவுன்சிலர் ஆனந்தன், சிலவர் வெங்கடாச்சலம், சண்முகசுந்தரம், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Feb 28, 2015
செக்கானூரணியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி செக்கானூ ரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
பாசறை மாவட்ட செயலாளர், ஆலங்குளம் செல்வம், பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருப்பரங்குன்றம் ஓன்றிய அவைத்தலைவர் சந்தனத் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் உள்பட 67 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதனையடுத்து செக்கானூரணி பஸ்நிலையத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்டச்செயலாளர் ஜெயராமன், விவசாயபிரிவு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவி பஞ்சவர்ணம், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் போத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி அ.இ.அ.தி.மு.க மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் 67 பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஸ்ரீரங்கத்தில் ராமச்சந்திர மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
ஸ்ரீரங்கதில் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்றும் துவங்கிய இந்த முகாம் நாளையும் நடைபெறுகிறது. இந்த 2 நாள் முகாமில் மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் ஆனந்தன்,முடங்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துறை குமார், துணை மருத்துவ தலைவர்கள் டாக்டர் சுகாஸ் பிரபாகர், டாக்டர் மோகன் சௌத்ரி உள்ளிட்ட மருத்துவர்களும், துணை மருத்துவர்களும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், சரும நோய், காது மூக்கு, தொண்டை, இதய நோய், முடக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், பல் நல துறை உள்ளிட பல மருத்துவ துறைகளில் இலவச பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்க படுகிறது.
முகாமில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்ய ஆவன செய்ப்படுகிறது.
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, 2 டி எக்கோ அல்ட்ரா சவுண்டு போன்ற பரி சோதனைகள் அவசியத்தின் பேரில் இலவசமாக செய்யபடுகிறது. சில மாத்திரைகள் 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது.