Feb 28, 2015

திருச்சி அ.இ.அ.தி.மு.க மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் 67 பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்

 ஸ்ரீரங்கத்தில் ராமச்சந்திர மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
ஸ்ரீரங்கதில் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்றும் துவங்கிய இந்த முகாம் நாளையும்  நடைபெறுகிறது. இந்த 2 நாள் முகாமில் மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் ஆனந்தன்,முடங்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துறை குமார், துணை மருத்துவ தலைவர்கள் டாக்டர் சுகாஸ் பிரபாகர், டாக்டர் மோகன் சௌத்ரி உள்ளிட்ட    மருத்துவர்களும், துணை மருத்துவர்களும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், சரும நோய், காது மூக்கு, தொண்டை, இதய நோய், முடக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், பல் நல துறை உள்ளிட பல மருத்துவ துறைகளில் இலவச பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்க படுகிறது.
முகாமில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்ய ஆவன செய்ப்படுகிறது.
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, 2 டி எக்கோ அல்ட்ரா சவுண்டு போன்ற பரி சோதனைகள் அவசியத்தின் பேரில் இலவசமாக செய்யபடுகிறது. சில மாத்திரைகள் 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது.