திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திகு ரூ.1.40 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை விழாவை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இன்று காலை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், துணை ஆணையாளர்கள் திருநாவுக்கரசு, சண்முகவடிவேலு, உதவி ஆணையாளர்கள் தங்கவேலு, குணசேகரன், மணி மற்றும் மாநகர காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.