திருப்பூர் அடுத்துள்ள பல்லடம் அண்ணா தி.மு.க.நகர ஜெயலலிதா பேரவை சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சர்வ மத கூட்டு பிரார்த்தனையுடனும் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பரமசிவம் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்ட உதவிகளையும்,,அன்னதானமும் வழங்கினர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீடூழி நலமுடன் வாழவும், அவர் வழக்கில் இருந்து விடுபட்டு, மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டியும், கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடு கோவில்களில் நடைபெற்றது. மேலும் பல்லடம் வைஸ் திருமண மண்டபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 1067 பேருக்கு இலவச வேஷ்டி, சேலை மற்றும் 5067 பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கும் விழா, நகர ஜெயலலிதா பேரவை தலைவரும், நகர்மன்ற துணைத்தலைவருமான வைஸ் பி.கே.பழனிசாமி ஏற்பாட்டின் பேரில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம் ,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், மாவட்ட கழக இணைச்செயலாளர் ஜோதிமணி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் துரைக்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், வழக்கறிஞர் வெங்கடாசலபதி, துணை செயலாளர் பாரதி செல்வராஜ், வார்டு செயலாளர் யவன கதிரவன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, இளைஞர் அணி சதீஷ்குமார்,மகளிர் அணி ஞானாம்பிகை ,வெண்ணை சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன், அருணாசலம், ரபிக் அஹமது, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது. பல்லடம் நகர ஜெயலலிதா பேரவை சார்பில்ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டஅமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பரமசிவம் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு\,பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.