மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புறநகர்
மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பரங்குன்றம்
முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் முதல் பூஜையாக ஜெயலலிதா பெயரில் மகா
பூஜை செய்யப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சிறப்பு
பிரார்த்தனை செய்யப்பட்டது. இதற்காக 67 தேங்காய்கள், 67 வாழைப்பழங்கள்
உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில்
தமிழரசன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜா, மாவட்ட துணை
செயலாளர் அய்யப்பன், பசுமலை கூட்டுறவு சங்க தலைவர் ஐ.பி.எஸ். பாலமுருகன்,
மதுரை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் வக்கீல் முனியாண்டி, கவுன்சிலர்கள்
முத்துக்குமார், சந்தியா பலராமன், நகர தலைவர் ராசு, ஒன்றிய செயலாளர்
சுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், நகர செயலாளர்கள்
பாலமுருகன், பன்னீர் செல்வம், மரக்கடை முருகேசன், பேரவை ஒன்றிய
துணைச்செயலாளர் தெய்வம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நாகராஜன், மகாதேவன்,
மாயி, பேரவை துணைத் தலைவர் ஒச்சாத்தேவர், சுமதி, சந்திரன் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.
திருநகர் 8–வது பஸ் நிறுத்தத்தில் ஜெயலலிதா
பிறந்தநாளையொட்டி கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில்
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ
வழங்கினார்.
திருநகர்– தனக்கன்குளம் பிரிவில் உள்ள பாலர் இல்ல
மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உணவு
வழங்கினார். தனக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் கருத்தக்கண்ணன், ஒன்றிய
கவுன்சிலர் செல்லக்கண்ணு, வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், கோபால், சூரி,
விளாச்சேரி பஞ்சாயத்து துணைத்தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட 67 இடங்களில் மாவட்ட
செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து
இனிப்பு வழங்கினார்.