Nov 4, 2014

திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு வழங்கினர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் வேலுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி ஆகியோர் உள்ளனர். 

Nov 3, 2014

Photo

Photo

Photo

Photo

Nov 2, 2014

திருப்பூர் மாநகர் மாவட்டம், அன்னூர், அக்கரை செங்கப்பள்ளி கிளை அ.தி.மு.க., செயலாளர் வரதைய்யகவுடர், மக்கள் முதல்வர் அம்மாவின் தீர்ப்பை கேட்ட அதிர்ச்சியில்

உயிரிழந்தார். அம்மா அவர்கள் உத்தரவுப்படி வரதைய்யகவுடரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஆதிராஜாராம், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்கள். உடன் அவினாசி எம்.எல்.ஏ.,அ.அ.கருப்பசாமி, திருப்பூர் துணை  மேயர் சு.குணசேகரன், அந்நூர் ஒன்றிய செயலாளர் .காளியப்பன், நகர செயலாளர் சவுகத்  அலி, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழு  தலைவர் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்




மாணவியர்க்கு வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சி.கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் முருகன், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் மணி, மார்க்கெட்  சக்திவேல்,சடையப்பன், கோகுல், ராஜ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் போஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரை அடுத்துள்ள உடுமலைப்பேட்டை தொகுதியில் உள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 1012 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, தாசில்தார் சைபுதீன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Nov 1, 2014

திருமங்கலத்தில் கல்லூரி அமைய இருக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

திருமங்கலத்தில் கல்லூரி அமைய இருக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு
திருமங்கலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழிச்சாலையில் டாப்கோ நிறுவனத்திற்கு சொந்தமான, செயல்பாடின்றி உள்ள 11.67 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக்கல்லூரிக்கான கட்டிடம் கட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரசு கலைக்கல்லூரிக்கான இடத்தில் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் பழனியப்பன் வலியுறுத்தினார்.
இதில் யூனியன் சேர்மன்கள் தமிழழகன், மகாலிங்கம் தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் விஜயன், துணை சேர்மன்கள் சதீஷ்சண்முகம், பாவடியான், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய செயலாளர் பாண்டி, ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், நகர துணை செயலாளர் ராஜாமணி உள்பட உயர்கல்வித்துறை அதிகாரிகள், கட்டுமான பிரிவு அதிகாரிகள் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.