திருமங்கலத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. திருமங்கலம் அருகே கப்பலூர் நான்கு வழிச்சாலையில் டாப்கோ நிறுவனத்திற்கு சொந்தமான, செயல்பாடின்றி உள்ள 11.67 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக்கல்லூரிக்கான கட்டிடம் கட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அரசு கலைக்கல்லூரிக்கான இடத்தில் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் பழனியப்பன் வலியுறுத்தினார்.
இதில் யூனியன் சேர்மன்கள் தமிழழகன், மகாலிங்கம் தாசில்தார் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் விஜயன், துணை சேர்மன்கள் சதீஷ்சண்முகம், பாவடியான், தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, ஒன்றிய செயலாளர் பாண்டி, ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், நகர துணை செயலாளர் ராஜாமணி உள்பட உயர்கல்வித்துறை அதிகாரிகள், கட்டுமான பிரிவு அதிகாரிகள் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.