Oct 1, 2014

3 - வது நாள் அ.தி.மு.க.பெருந்திரள் உண்ணாவிரதம்







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்   சார்பில்  திருப்பூர் மாநகராட்சி முன்புறம்   'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வர கர்நாடக கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தரராஜ், டி.என்.எஸ்.டி.சி., திருப்பூர் மண்டல செயலாளர் கிருஷ்ணன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் ,அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,  தம்பி மனோகரன், ஜெகதாம்பாள், பி.கே.முத்து, மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ், 
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார்நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி,  கே.கே.காளியப்பன், வி.கே.பி.மணி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பார்வார்டு பிளாக் ராஜசேகர்,  தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன்  லீக் மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா,  
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சி.டி,சி.தேவராஜ், கே.ஜி.பழநியப்பன்,  மணி, சி.எஸ்.கண்ணபிரான், ராஜசேகர், பொன்னுசாமி,  சுகுமார்,கோபால், சோமு, பாலுச்சாமி, பன்னீர்செல்வம், குணசேகரன், விஸ்வநாதன், பாலு, சின்னசாமி, வினோத், ராஜேந்திரன், முபாரக்,  சேகர்,கிருஷ்ணன், நாட்டுக்காவலன்,  மகளிரணி ருக்குமணி, சுந்தராம்பாள், சரஸ்வதி,  அன்னபூரணி,மல்லிகா,  சரசம்மாள், 
 உஷா ரவிக்குமார், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, எஸ்.பி.என்.பழனிசாமி, வே.அய்யாசாமி,சிவில் சப்ளை பாலு, ராஜேந்திரன்,  பி.கே.எஸ்.சடையப்பன்,  கவுன்சிலர்கள் முருகசாமி, ஆனந்தன், 
கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, வே.அய்யாசாமி, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், பாசறை சதீஷ், கோகுல், பேபி தர்மலிங்கம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன் அசோக் குமார், பாரதி பிரியன், மோட்டார் பாலு, சாரதா, இசாக், எம்.ஜி.குணசேகரன், கேபிள் ரபி, முகமது ஜக்கிரியா, பரமராஜன், செல்லமுத்து, முகமது யூனுஸ், செல்வராஜ் நித்தியானந்தம், 

திருப்பூர் கோவிலில் ஜெயலலிதா மீண்டு வர சிறப்பு பிரத்தனை





திருப்பூர் மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் ஜெயலலிதா மீண்டு வர ஈஸ்வரன்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெரிந்து தமிழனத்தை காத்திட அவர் மீண்டு வர வேண்டி ஈஸ்வரன் கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரா சுவாமி, சண்முக சுப்பிரமணியர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆகிய மூன்று கொவில்களில்  இன்று 8 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்  மாநகர் மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், விஜயகுமார், தெற்கு  தம்பி மனோகரன், கருணாகரன், கோமதிசம்பத்,4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சின்னு, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி எம்.சி., மற்றும் ஈஸ்வரமூர்த்தி, யுவராஜ் சரவணன்,ரஞ்சித் ரத்னம், ரத்தினகுமார், பி.லோகநாதன், சுரேந்தர், வளர்மதி சாகுல்அமீது, தாமோதரன், அசோக் குமார், நீதிராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் பாரதி பிரியன், எம்.ஜி.குணசேகர், பார்வார்டு பிளாக்  பொது செயலாளர் என்.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் பேபி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,   சார்பில்  திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில்  'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதாவின், ' மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை துணை மேயர் சு.குணசேகரன், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.  வடக்கு தொகுதி செயலாளர் ஜான் . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி,ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள்,  அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்,  நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி, கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன், பார்வார்டு பிளாக்  கதிரவன், ராஜசேகர், அசோக் குமார், பாரதி பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திடீர் திருப்பம். ஜாமீன் கிடைக்க வாய்ப்பு.

ஜெ. வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை, ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!
ஜெ. வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை, ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!பெங்களூர்: அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது. ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னற் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது.

எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர். அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை. எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், புதன்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது

ஜெயலலிதா வாழ்க என்ற கோஷத்துடன் காவலர் தீ குளிக்க முயற்சி!

ஜெயலலிதா வாழ்க என்ற கோஷத்துடன் காவலர் தீ குளிக்க முயற்சி!

சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன் காவலர் தீக் குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிபவர் வேல்முருகன் (42). இவர் அலுவலக பணிக்காக சென்னைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தமிழக காவல்துறை டி.ஜி.பி. அலுவலக வாயில் முன் வேல்முருகன் காவலர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்தாராம்.அப்போது அவர் திடீரென, முதல்வர் ஜெயலலிதா வாழ்க, அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டப்படி தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி, தீ வைக்க முயன்றாராம். இதைப் பார்த்த அங்கு பாதுகாப்பு நின்றுக் கொண்டிருந்த வேல்முருகனை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரை, அங்கிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீஸார் நடத்தினர். தற்கொலைக்கு முயன்ற வேல்முருகன், காவலர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளாராம். இதில் சில போட்டிகளில் வெற்றி பெற்றபோது, ஜெயலலிதா அவருக்கு பரிசு வழங்கி, பாராட்டியுள்ளார். இதன் விளைவாக வேல்முருகன், ஜெயலலிதா அனுதாபியாக இருந்துள்ளார்.  இதன் காரணமாகவே  ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடியாமல், அவரை விடுதலை செய்யக் கோரி, வேல்முருகன் தற்கொலைக்கு முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தால் டி.ஜி.பி. அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரையும் அதிரவைத்த கருணாநிதி குடும்ப சொத்து பட்டியல்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட. இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி" அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்" மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்" மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்" மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்" என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்" என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை" - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். -
இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது

Sep 30, 2014

NEWS 30.09.14


ஜெயலலிதா அவசர மனு: கர்நாடக ஐகோர்ட் தலைமை பதிவாளருடன் நீதிபதி குன்ஹா திடீர் சந்திப்பு!

Jayalalithaa-gets-relief-in-disproportionate-assets-case




























சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயிடம், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனுவை அளித்துள்ளார்.
இதனிடையே, ஜெயலலிதா தரப்பில் அவசர மனு அளிக்கப்பட்ட நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பட்டேலை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

- See more at: http://newsalai.com/?p=28469#sthash.b7WHQPOZ.dpuf

அ.தி.மு.க. தொண்டர்கள் 3–வது நாளாக உண்ணாவிரதம்



சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெங்களூர் கோர்ட்டு வழங்கியதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.என். ரவி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் நேற்று உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் விருகை. வி.என். ரவி தலைமையில் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதத்திற்கு மைத்திரேயன் எம்பி, அமைப்பு செயலாளர் பொன்னையன், ஓட்டுநர் அணி மாநில செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் எம்எல்ஏக்கள் ஜி. செந்தமிழன், எம். கே. அசோக், மயிலை ராஜலெட்சுமி, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ். அண்ணாமலை, சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி, கவுன்சிலர்கள் எம்.எம். பாபு, நூர்ஜகான், என்.எஸ். மோகன், முன்னாள் கவுன்சிலர்கள் சொ. கடும்பாடி, ராஜேந்திர பாபு, பாசறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சைதை சாரதி, தி.நகர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர் நகர் அன்பு, மயிலை ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னையில் நேற்று 3–வது நாளாக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா ஏற்பாட்டில் 4 தொகுதிகளில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
எழும்பூர் பகுதி செயலாளர் மகிழன்பன் தலைமையில் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டிலும், துறைமுகம் பகுதி செயலாளர் இருசப்பன் தலைமையில் மின்ட் அரசு அச்சகம் அருகிலும் உண்ணாவிரதம் நடந்தது.
திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் சுகுமார் தலைமையில் மகாலட்சுமி தியேட்டர் அருகிலும், ராயபுரம் பகுதி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஜி.ஏ.ரோட்டிலும் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் இம்தியாஸ், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகில் சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தரங்கை கண்ணன், கவுன்சிலர் உஷா பெருமாள், பெருமாள், ஆர்.கே.சந்திரன், அசோக், யுவராஜ், செல்வி, கோமதி, குமார், கோபி, ரவி, ஆனந்த், பாஸ்கர், முருகேஷ், பிரகாஷ், ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் உண்ணாவிரதம் நடந்தது.இதில் அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு, வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
இதில் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் செந்தமிழன், அசோக், ராஜலட்சுமி, டாக்டர் அழகு தமிழ்செல்வி, வே.சோலை, கவுன்சிலர் மலைராஜன், வி.என்.சேகர், தனசேகர், அரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற் றனர்.
மாதவரம் மூலக்கடையில் பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் 150 பெண்கள் உள்பட 600–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மூலக்கடை சக்தி, முன்னாள் கவுன்சிலர் எறும்புலி வடிவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது



சென்னை, அக்.1 - ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல மாநிலக்கல்லூரி மணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ்பாதுகாப்புபோடப்பட்டது
உலக தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்கள் உண்ணாவிரதம்:
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.