உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தரப்படும் என தேர்தல் வாக்குறுதி ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கு ப கிருஷ்ணன் அறிவிப்பு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீரங்கம் தொகுதியில் கு ப கிருஷ்ணன் தொடர்ந்து தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு உள்ளர். இதன் ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியத்திலுள்ள 'நாச்சிகுறிச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை அதவத்தூர் தாயனூர் புங்கனூர் குமாரவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் கூறுகையில்
மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி கழிவுநீர் வசதி முறையாக செய்து தரப்படும்.மேலும் மணிகண்டம் ஒன்றிய பகுதியை கல்விக்கூடம் நிறைந்த பகுதியாக மாற்றப்பட்டும் , மேலும் போதாவூரில் அமைந்திருக்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அதிமுக ஆட்சியில்நான் அமைச்சராக இருக்கும்போது அமைக்கப்பட்டது என்று கூறினார்.நாச்சிகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பொம்மணி சமுத்திரம் காளியம்மன் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் MGR , புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
அப்போது விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலான உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரிகரைகள் உயர்த்தப்படும்
அல்லித்துறை, சோமரசம்பேட்டை, உய்யகொண்டான் திருமலை, புத்தூர்4 ரோடு வரை உள்ள பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி கல்லூரி
மாணவர்களுக்குமட்டுமல்லாதுபொது மக்களுக்கும் பெரும்சிரம்மாக உள்ளது. எனவே உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தரப்படும்.அப்படி மாற்றினால் போக்குவரத்துநெரிசல் முற்றிலும் குறையும் என்றுகூறினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பண்,ஜெயகுமார்அழகேசன்,,பாரதியஜனதா கட்சியின்மண்டல பொறுப்பாளர்.ராஜேந்திரன்,பாமகமாவட்ட செயலாளர்சரவணன் உள்ளிட்ட பலர். கலந்து கொண்டனர்.