Mar 23, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கோப்பு பகுதியில் குளிர் வசதியுடன் திருமண மண்டபம் கு.ப.கிருஷ்ணன்

 கூட்டுறவு கடன், நகைக்கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடனை தள்ளுபடி செய்த அம்மாவின் நல்லாட்சித் தொடர ஆதரிப்பீர் இரட்டை இலையை - ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர்  குப கிருஷ்ணன்


தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.குப கிருஷ்ணன் அவர்கள் 7ஆம் நாள் பிரச்சாரமான இன்று அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை,  போதாவூர்,  புலியூர், வியாழன்மேடு, கணேசபுரம், போசம்பட்டி, மணியன் நகர், எட்டரை,  மஞ்சாங்கோப்பு, முள்ளிக்கரும்பூர், முல்லைநகர், கோப்பு, அயிலாப்பேட்டை, குழுமணி, தச்சக்குடி பேரூர், ஏகிரிமங்கலம், சாத்தனூர்,     சீராத்தோப்பு, மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான்நல்லூர், மல்லியம்பத்து, பெருங்குடி, செங்கதிர்சோலை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இன்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்த பொழுது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களை பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகளை சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  செல்லும்போது அந்த வழியில் உள்ள முதலைப்பட்டியில் மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தியைப் பெருக்குவதற்கு “வெப்பமூட்டி குடில்” அமைத்து தரப்படும் எனவும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என்றும் மல்லிகை பூவில் இருந்து செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இத்தொகுதியில் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார், அதனை தொடர்ந்து வியாழன்மேடு, எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.  


அப்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம் எனவும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1500 வங்கி கணக்கில் செலுத்துவோம் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்தார், அதேபோல திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்கத்துடன் 60 ஆயிரம் ரூபாய் அம்மா அரசால் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

மேலும், அவர் கூறுகையில் ஸ்ரீரங்கம் தொகுதி மாண்புமிகு அம்மா அவர்கள் நின்று வென்ற தொகுதி, அம்மா வெற்றிபெற்ற பிறகு இந்த தொகுதியில் பல்வேறு நலதிட்டங்களை கொண்டு வந்தார்கள். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், வறட்சி நிவாரணம் கொடுத்தார்கள், நம்முடைய டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள், இந்த வருடம் நல்ல மழை பெய்து வாழை, நெல் பயிர்கள் எல்லாம் நன்றாக இருந்தது. அறுவடை நேரத்தில் கனமழை பெய்து நெற்பயிர் எல்லாம் அழுகி வீணாகி விட்டது. எனவே, கருணை உள்ளம் கொண்ட நம்முடைய விவசாய  முதலமைச்சர் அவர்கள், விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தார், அதோடு 6 பவுன் வரை வாங்கிய நகைக்கடன்களையும், சுயஉதவிகுழுக்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார்.

அதேபோல பம்புசெட்டிற்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் தந்து கொண்டு இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் அரசு, அதேபோல பெண்களின் சுமையை குறைக்க மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி அனைத்தையும் விலையின்றி அளித்ததும், வரும் காலத்தில் விலையில்லா வாஷிங்மிஷன், விலையில்லா 6 சிலிண்டர் வழங்க இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சிதான், அதேபோல ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டிற்கு 7500 ரூபாயும் தரஇருப்பதும் மாண்புமிகு எடப்பாடியார் அரசுதான்.

மாணவர்களை கொடிய கொரோனா வைரஸ்சில் இருந்து, மாணவர்களை காப்பாற்ற “ஆல்பாஸ்” போட்டவரும் நம்முடைய எடப்பாடியார் தான், அதேபோல மாணவர்கள் படிக்கும் போது பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்ததும் நம்முடைய எடப்பாடியார் தான். எனவே இப்படிப்பட்ட நல்லாட்சி தொடர நீங்கள் எல்லாம் தொடர்ந்து புரட்சித்தலைவரின் சின்னமாம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ், முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும்   பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.