திருச்சி
20.03.2021
திருச்சி மக்கள் நலனில் அதிமுக அரசு திருச்சி ஸ்ரீரங்கம் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் பிரச்சாரம் முக. ஸ்டாலினுக்கு சவால்
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் இன்று மாலை அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உத்தமர்சீலி ,பனையபுரம், கிளிக்கூடு ,கவுத்தரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள்
உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அப்போது வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் பேசுகையில்
லால்குடி கூகுர் முதல் கிளிக்கூடு வரைகாவிரி கொள்ளிடக் கரையில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றுதெரிவித்தார்.
மேலும் அதிமுக வெற்றி சாதனைகள் குறித்து பேசுகையில், தாலிக்கு தங்கம்வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
திருச்சி கிளிக்கூடு முதல் தஞ்சை மாவட்டம் வரைறனர் அதிமுக அரசியல் தான் சாலைகள் அமைக்கப்பட்டது
கொரோனா காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததின் காரணம் மாணவர்கள் மூலம் நோய்கள் வரகூடாது என்றகாரணத்தினால்மட்டுமே.
ஸ்டாலின் தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறார் விதை நெல்லை எப்போது விதைக்க வேண்டும் எப்போது பறித்து நட வேண்டும் எப்போது அறுவடை செய்யவேண்டும் என்று தெரிந்தால் கூறட்டும் என பரப்புரையின் போது ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு .ப .கிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.
அதனை தொடர்ந்து உத்மர்சீலி பகுதிக்கு சென்ற போது உற்சாகமாக மேள தாளத்துடன் வரவேற்றனர் அப்போது வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் வீடு வீடாக சென்று போது ஆரத்தி எடுத்து வரேற்ற போது, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார்,ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், அழகேசன் ,செல்வராஜ், நடராஜ் ,பனையபுரம் கர்ணன்
தமிழர் விடுதலைக் கழக திருச்சி மாவட்ட செயலாளர் பனையபுரம் P S சங்கர்,உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.