திருச்சி அதிமுக சார்பில் போட்டியிடும் மேற்கு தொகுதி வேட்பாளராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.
இன்று அவர் வீடு வீடாக பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை கூறி அதிமுகவிற்கு மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் வளர்மதி மாநில பொறுப்பாளர்கள் ரத்தினவேல் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்