திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக - அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பில் பேச்சு ...
திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வது வார்டு தாமரை சிவசக்திவேல் 1 முதல் 6 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் வளர்மதி ...
மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக -
அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வந்தடைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்
தமிழகம் மின் மிகை மாநிலம் போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது என அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.
அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர் வளர்மதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், ஜவஹர் சகாதேவன்பாண்டி ,முத்துக்கருப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்