Mar 15, 2016

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தெரிவித்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் மாவட்ட ஆட்சித்தலைவர்  பழனிசாமி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் தெரிவித்தர். 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (15.03.2016) தொடங்கி வருகின்ற 13.04.2016 முடிய நடைபெறுகிறது. திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பி~ப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆய்விற்க்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தது :
திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் 20249 மாணவர்களும்ää 19887 மாணவிகளும் ஆக மொத்தம் 40136 மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வானது இன்று முதல் 15.03.2016 முதல் 13.04.2016 முடிய நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 427 பள்ளிகளில் உள்ள 144 தேர்வுமையங்களில் மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். இத்தேர்விற்கு 144 தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராகவும் 212 பட்டதாரி ஆசிரியர்கள் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2100 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளாகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வு மையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறமால் இருக்க 175 ஆசிரியர்கள் பறக்கும்படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 138 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 118 பார்வையற்றோருக்கு 118 ஆசிரியர்கள் சொல்வதை எழுதும் உதவி தேர்வளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேருக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் தேர்வு எழுத அரசு தேர்வு துறை இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் கல்வித்துறை வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தார்.