Jan 20, 2015

திருப்பூரில் எம்.ஜி.ஆர்.பிறந்த நாளில் 1000 லிட்டர் பால் வழங்கிய துணை மேயர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் 3 பகுதிகளிலும் மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாலிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு 500 லிட்டர் பால் மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை துணை மேயர் வழங்கினார். இத்துடன் கே.பி.என்.,காலனியில் இனிப்பு மற்றும் முள்ளுக்காடு பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி, அந்த பகுதி மக்களுக்கு 500 லிட்டர் பால் என மொத்தம் 1000 லிட்டர் பால் தானம் வழங்கினார். 
இந்த விழாவில் கலந்து கொண்டு துணை மேயர் சு.குணசேகரன் பேசியதாவது:-
   மக்கள் திலகம் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்., மக்களுக்காகவே வாழ்ந்தார். தனது வீட்டை காதுகேளாதோர் பள்ளிக்கு வழங்கினார். தனது சொத்துக்களை தன்னுடன் உழைத்தவர்களுக்கு பங்கு போட்டு கொடுத்தார். இந்திய நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொண்டாடும் அவரது பிறந்தநாளை கொண்டாடும் தலைவரான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை இந்த் பகுதியில் 25 ஆண்டுகளாக நாம் பால் வழங்கி கொண்டாடி வருகிறோம். இன்றைக்கு எம்.ஜி.ஆர் வழியில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது தலைமையில் இயங்கி கொண்டிருக்கிற இயக்கம் அண்ணா தி.மு.க., நாம் என்றும் அவருக்கு உறுதுணையாக இருப்போம்.இவ்வாறு அவர் பேசினார். 
     இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பி.கே.எஸ்.சடையப்பன், வெங்கிடுபதி, கிளைசெயலாளர் ரவிகுமார், மோகன், கிருஷ்ணன், பாலன், வேலாயுதம், வெங்கடேஷ், சந்தானம்,, பரமேஸ்வரன், சுப்பிரமணியன், தாமோதிரன், உண்ணி கிருஷ்ணன், சிவக்குமார், சதீஷ், சிவசக்தி, கதிரேசன்,  சசிகுமார், மகேந்திரன், லட்சுமணன், நிவேந்திரன், நிவாஸ்,மணிகண்டன், பாலாஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.