வருகிற 30 ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நடக்க இருக்கிறது. இதற்காக, சில மாதங்களுக்கு முன்பு தேவர் சிலையில் பொருத்த அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பாக மாண்புமிகு அம்மா அவர்கள் வழங்கிய தங்க கிரீடம், தங்க கவசம் ஆகியவை மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா கிளை லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, அந்தப் பொருட்களை வழங்க வேண்டியிருப்பதால் கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் வங்கியில் கையெழுத்திட்டு வாங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார்.அதனை எடுத்து நினைவிடப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வழங்கினார்.உடன் அமைச்சர் செல்லூர் ராஜு ..