Feb 26, 2020

தமிழக முதல்வர் பேட்டி

திருச்சி

                    
    
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும். இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு  மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு 387.60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. கர்நாடகாவின் இத்தகைய செயல்பாடுக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.  10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.  என்பிஆர்.ல் தற்போது மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது.  நாங்கள் மக்களை செல்கிறோம்.   கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்  ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்வார்கள். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது.  ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியாற்றில் எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை கமிட்டிதான் முடிவு செய்கிறது. அந்தந்த பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது. எனினும் தற்போது அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த அரசு பணிகளுக்கு மட்டுமே தற்போது மணல் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

Feb 16, 2020

திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

திருச்சி

திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் இன்று  தொடங்கி வைத்தனர்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சிறிய திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 2019- 2020 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து,கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, இறகுபந்து, டென்னிஸ் ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகள போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது..

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர்  போட்டியை துவக்கி  வைத்தனர்.

மேலும் இப்போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Jan 19, 2020

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது கடந்த பதிமூன்று 1 2011 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை இதைத் தொடர்ந்து நிலையான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கு இந்த முறையை மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும் திருச்சி மாநகராட்சியில் 244 மையங்களிலும் துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும் மணப்பாறை நகராட்சி 23 மையங்களிலும் மொத்தம் ஆயிரத்து 563 மையங்களில் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகரங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது ஸ்ரீரங்கம் குணசீலம் சமயபுரம் வயலூர் ஆகிய கோயில்கள் மசூதிகள் ஆலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலாத் தலங்க ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது செய்துள்ளது ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இன்று செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணம் செய்யும் ஐந்து வயதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் 16 74 69 குழந்தைகளுக்கும் நகர்புறங்களில் 97 47 4 குழந்தைகளுக்கும் இடம்பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 527 பெயர்களுக்கும் ஆக மொத்தம் 265470  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளது இம்முகாமில் 6650 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்

Jan 6, 2020

திருச்சி பூலோக வைகுண்டத்தில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Jan 5, 2020

திருச்சி பிரம்மாண்டமாக அரசு பொருட்காட்சி துவக்கம்

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.


இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.


அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.


இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடைபெற்ற பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dec 24, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளரும்  முன்னாள் தலைமை கொறடா மனோகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சண்முகா நகர்  மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார் 


திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில் நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்

இந்நிகழ்வின் போது ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிப் பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்


Dec 23, 2019

திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவி அதிமுக வேட்பாளர் கார்த்தி வாக்கு சேகரித்தார்




திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண் 6 இல் போட்டியிடும் கார்த்திக்  அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

அவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏராளமான கழக தொண்டர்கள் மகளிர் அணி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் பிரச்சாரம்

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்


நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்