Mar 22, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்




 அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்


அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வரகனேரி  அல்முஹம்மதியா பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்களிமும் அவைத் தலைவர் ஹாஜி அல்லாஹ் மஸ்ஜித் இமாம் பஸ்ஸின் தாவூது ஆகியோரிடம் ஆதரவு கோரினார் .


திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் sdpi சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைவர் அரசன் செயலாளர் ரபீக் முபாரக் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா வழக்கறிஞர் அணி இணைச் செயலர் கோபி செழியன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் இலக்கிய அணி செயலாளர் வரதராஜன் பொறியாளர் அணி செயலர் விக்னேஷ் உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Jan 27, 2019

திருச்சி ஸ்ரீரங்கம்ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா



ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். 



ஆண்டவன் ஆசிரம தேசியத்தலைவர் ராஜகோபால் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்களையும் கல்லூரியில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  இயக்குனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார் துணை முதல்வர் பிச்சைமணி நன்றி கூறினார்

Dec 2, 2018

விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது

திருச்சி  02.12.18

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த 150 பயணிகள் உயிர் தப்பினர், அவர்களை திருச்சி தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் திருச்சியில் சமீபகாலமாக விமான கோளாறு, விமான விபத்து என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்



*விமான நிலையத்தில் 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல்*

மலேசியா, துபாயிலிருந்து இரவு வந்த விமானத்திலும், இன்று காலை  சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினம் சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.

Dec 1, 2018

கைத்தறி சிறப்பு கண்காட்சி

திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.


இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

திருச்சி மாணவ மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி

திருச்சி 1.12.18
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 47,208 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

முதற்கட்டமாக திருச்சியில் இன்று 2183 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறையினர் அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி 406 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .இராசாமணி. தலைமையில்,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும் காலம் முதல் பள்ளி படிப்பு, உயர்கல்வி, அரசு பணியில் சேரும் வரை அவர்களுக்காக சீரிய பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். கல்வித்துறைக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 27,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கல்வித்துறையில் இந்திய திருநாடே வியக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணி, விலையில்லா மதியஉணவு, கலர் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு அற்புதமான அரசு. எனவே மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். வரலாற்று சாதனைகள் படைக்க வேண்டும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். இந்த சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.வேலுச்சாமி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Nov 26, 2018

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி   25.11. 18

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி


திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கஜா புயலால்  பாதிப்படைந்த பகுதிகளுக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்ப பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5வது முறையாக புயல் நிவாரண பொருட்கள் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 150 காய்கறிகள் மூட்டை  அனுப்பப்பட்டன.அப்போது வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,

நேற்று  2000 நபர்களுக்கு திருச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக பரிமாறப்பட்டது அதேபோன்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் துரைக்கண்ணு ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்களின் முயற்சியில் திருச்சி மாவட்ட சார்பில் வெங்காயம் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற காய்கறி மூட்டைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது மின்சாதன பாதிப்படைந்த பகுதிகளுக்கு மின்சாரம் தயாரிக்கும் பணியும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று காலை காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நாளை காலை அரசு அலுவலர்களான BDO போன்றவர்களை அழைத்து நாளைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

Nov 4, 2018

திருச்சி இந்தியன் ஆயில் நிறுவனம் நடத்திய மாரத்தான்


ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக‌ இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான்




திருச்சி  இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியை தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில், திரு. எஸ்.செந்தில்குமார், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. டி.ஜி.நாகராஜன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. சி.கோபாலகிருஷ்ணன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (சில்லறை விற்பனை) - இந்தியன் ஆயில் தமிழ் நாடு, திரு. திருவள்ளுவன், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. பாபு நரேந்திரா, சீஃப் டிவிஷனல் சில்லறை விற்பனை மேனேஜர், திருச்சி டிவிஷனல் அலுவலகம் ஆகியோர் முன்னிலையில் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவங்கி வைத்தார்.

பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.

கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புண‌ர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம்  எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.

Oct 16, 2018

திருச்சி உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி - 16.10.18

உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை  கண்டறிந்து  அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்