Nov 22, 2015
Nov 3, 2015
Oct 25, 2015
அ.தி.மு.க. அரசின் சாதனைகளே அத்தாட்சி 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு அ.தி.மு.க. அரசின் சாதனைகளே அத்தாட்சியாக விளங்குவதால் வர இருக்கின்ற 2016 சட்டமன்ற தேர்தலிலும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
விருதுநகர் அம்மன் கோவில் திடலில் விருதுநகர் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வின் 44-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. பொருளாளரும், நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தந்தை பெரியார் சீர்திருத்த கருத்துக்களை திறம்பட செயலாக்க உழைத்தார். பேரறிஞர் அண்ணா தமிழர்களை தலை நிமிரச் செய்ய பாடுபட்டார். எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்தார். இந்த 3 தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று மக்கள் நலனுக்காகவே பாடுபட்டு வருபவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். 17½ லட்சம் உறுப்பினர்களுடன் இந்த கட்சியை விட்டு மறைந்த போது கண்ணிமை போல் கட்சியை கட்டிக்காத்து அ.தி.மு.க. இனி இருக்காது என்று ஆருடம் சொன்னவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று 1½ கோடி உறுப்பினர்களுடன் அ.தி.மு.க.வை ஆலமரமாக விழுது பரப்பி நிலை நிறுத்தி உள்ளவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.48 சதவீதம்எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்தார். ஜெயலலிதா 14½ ஆண்டு காலம் முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 4½ ஆண்டுகளில் தொலைநோக்கு திட்டத்தோடு மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட 96 ஆயிரம் கோடி வருமானத்தை மீண்டும் மக்கள் நலனுக்காக செலவிடுபவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. மொத்த வருமானத்தில் 48 சதவீதத்தை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஒரு மனிதனுக்கு முக்கிய தேவையாகும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1 கோடியே 80 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் கடை மூலம் மாதம் 20 கிலோ ரேஷன் அரிசியினை வழங்கி வருகிறார். ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் மற்றும் இலவச வீடுகள் கட்டி தருகிறார். கல்விக்கென 23 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாகும்
விஜயகாந்த் அமைச்சர் அந்தஸ்துள்ள எதிர்கட்சி தலைவராக முறையாக செயல்படுவதில்லை. அதனால் தான் மாபா பாண்டியராஜன் அங்கிருந்ஙது வந்து நம்முடன் இணைந்து விட்டார். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அவர் வெற்றி பெற முடியாது. பாரம்பரியமிக்க காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நடிகை நக்மா சினிமாவிலும் நேரிலும் அழகாக உள்ளார் என்ற கருத்தினை கண்டுபிடிப்பை சொல்லி வருகிறார். ஸ்டாலின் நடக்கிறார், ஓடுகிறார். பா.ம.க. தலைவர் நானும் என் குடும்பத்தாரும் பதவிக்கு வந்தால் நடுத்தெருவில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள் என்று கூறினார். அவரது மகன் மத்திய மந்திரியாக இருந்த கதையும் முடிந்து போய் விட்டது. தற்போது முதல்-அமைச்சர் கனவில் அலைகிறார். இவர்கள் எல்லாம் மக்களின் ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற முடியாது.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பின்பு தான் உச்சநீதிமன்றம் மூலம் போராடி காவிரி நதிநீர் ஆணையத்தை பெற்று தந்தார். இதே போன்று முல்லைபெரியாறு பிரச்சனையிலும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு தான் உச்சநீதிமன்ற ஆணை மூலம் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவு பெற்றார். கேரள அரசின் சட்டதிறுத்தம் செல்லாது என்ற தீர்ப்பினையும் பெற்றார். ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரசோடு தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அங்கு போரை நிறுத்தியிருக்கலாம். ஆனால் தி.மு.க. எதையும் செய்யவில்லை. கச்சத்தீவை தாரை வார்க்க அனுமதித்தது தி.மு.க. தான். தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா அது ராமநாதசேதுபதியின் நிலம் தான் என்பதற்கான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். ஈழத்தமிழர் நலனுக்காக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளார். சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். மதுவிலக்கை பற்றி பேசும் தி.மு.க. தான் ராஜாஜியின் எதிர்ப்பையும் மீறி மது விற்பனையை அறிமுகப்படுத்தியது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கணக்கில் கெட்டிக்காரார். எப்போதும் நூற்றுக்கு நூறு பெறுபவர். உள்ளாட்சி தேர்தலில் 98 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். கூட்டுறவு தேர்தலில் 100 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் வெற்றி பெற்றோம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு என்பதற்கு அ.தி.மு.க. அரசின் சாதனைகளே அத்தாட்சியாக விளங்குவதால் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராதாகிருஷ்ணன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வைகைச்செல்வன், மாபா பாண்டியராஜன், கோபால்சாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் சக்தி கோதண்டம் ஆகியோர் பேசினர். இதில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்டத்தில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி இம்மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை நிருபிப்போம் என்றார். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் தொகுதி செயலாளரும், யூனியன் தலைவருமான கலாநிதி, நகர அ.தி.மு.க. செயலாளரும் நகரசபை கவுன்சிலருமான முகமது நயினார் ஆகியோர் செய்திருந்தனர்
Oct 16, 2015
விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றார் ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார்.
பொறுப்பு ஏற்றார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இவர் மாவட்ட செயலாளர் ஆவது இது 2வது முறையாகும். மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அருப்புக்கோட்டை வைகைசெல்வன், விருதுநகர் மாபா பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
சாதாரண தொண்டன்
சமானிய குடும்பத்தில் பிறந்து எளிய தொண்டனாக அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டேன். திருத்தங்கல் பேரூராட்சி செயலாளர், நகர செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. ஆக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளராகவும் கட்சி பணியாற்றிய என்னை அமைச்சராகவும் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழகு பார்த்தார். உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சி பணியாற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவை செய்தால் அதற்குரிய இடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார் என்பதற்கு இதுவே உதாரணம்.
7 தொகுதிகளிலும் வெற்றி உறுதி
என்னை இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து கட்சி பணியாற்ற முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாய்ப்பு தந்துள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட கட்சி பணியாற்றுவேன். விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போதே பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கொடி நாட்ட அனைவரும் அயராது பாடுபட வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநில மகளிரணி நிர்வாகி சக்தி கோதண்டம், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், இணை செயலாளர் ரமாதேவி குருசாமி, மகளிர் அணி செயலாளர் கவுரி நாகராஜன், விருதுநகர் ஒன்றியக்குழு தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகம்மது நயினார், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி (சாத்தூர் கிழக்கு), தேவதுரை (மேற்கு), மயில்சாமி (ஸ்ரீவில்லிபுத்தூர்), சங்கரலிங்கம் (அருப்புக்கோட்டை), ராமமூர்த்தி ராஜ் (காரியாபட்டி), குருசாமி (ராஜபாளையம் மேற்கு), பூமிநாதன் (நரிக்குடி), முத்துராமலிங்கம் (திருச்சுழி), அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முத்துராஜா, நகர செயலாளர் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் வீரகணேஷா, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருத்தங்கல் சென்று அங்குள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.