திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகில் உள்ள தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகம் அருகிலிருந்து தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி கொடியசைத்து இன்று (17.03.2015) தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் 16.03.2015 முதல் வருகின்ற 22.03.2015 வரை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் பருகும் நீரின் தன்மையை உணரவும்ää தரமற்ற குடிநீரினால் பரவக்கூடிய நோய்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இவ்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில்ää முதல் நாள் அன்று மாவட்ட அளவில் விழிப்புணர்வு பேரணிகளும்ää 2ம் நாள் ஒன்றிய அளவில் பேரணிகளும்ää 3ம் நாள் ஊராட்சிää நகராட்சிää பேரூராட்சி அளவில் விழிப்புணர்வு கூட்டங்களும்ää 4ää 5ää 6 மற்றும் 7ம் நாட்களில் நீர் மாதிரி சேகரிப்பு பரிசோதனையும் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற பேரணியில் விளையாட்டு விடுதி மாணவää மாணவிகள்ää மகளிர் சுயஉதவிக்குழுவினர்ää ஜமால் முகமதுää செயின்ட் ஜோசப்ää உருமு தனலெட்சுமி கல்லூரிää இந்திராகாந்தி கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி ரயில்வே சந்திப்பில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸ்ää மத்திய பேருந்து நிலையம் வழியாக வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
இப்பேரணியில் நகரப் பொறியாளர் சந்திரன்ää குடிநீர் வடிகால்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் என்.சந்திரசேகரன்ää நிர்வாகப் பொறியாளர் குமார்ää மாநகராட்சி செயற்பொறியாளர் பாலகுருநாதன்ää செயற்பொறியாளர் நாகே~; உட்பட பலர் கலந்து கொண்டனர்.