திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்லாண்டு வாழ பால் குடம் மற்றும் தில்லைநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து உக்கிரமாகாளியம்மன் வரை வந்து சிறப்பு பூஜை கோயிலில் நடைபெற்றது. அஇஅதிமுக மருத்துவ அணிதலைவர் சுப்பையா மற்றும் மகளிரணி துணைத்தலைவர் மருத்துவர் தமிழரசி சார்பில்; நடைபெற்றது தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.