திருச்சி மாநகராட்சி 9 வது வார்டில் அதிமுக வேட்பாளர் W. ராணி வெஸ்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 9 வது வார்டில் அதிமுக சார்பில் W. ராணி வெஸ்லி போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 9 வது வார்டுக்குட்பட்ட
வண்டிக்கார தெரு, வாலாஜா தெரு, பங்காளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் சுப்ரா, உறையூர் பகுதி அவை தலைவர் வெஸ்லி, IT WING செயலாளர் தாயார் சீனிவாசன், K. செல்வம், P. செல்வம், ரஜாக், ஜெய்சங்கர், பாபர் அலி, ரமேஷ், IT WING இணை செயலாளர் பாலாஜி
உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.