திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
சோமரசம்பேட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுஅதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டை குழுமணி ஜீயபுரம் பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல இடங்களில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது . முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோபி நடராஜன், மணிகண்டம் முத்துக்கருப்பன் , நகர செயலாளர்கள், முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன், பேரூர் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை, வார்டு, பனையபுரம் கர்ணன், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.