Mar 11, 2021

திருச்சி திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் பா.குமார் அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி  திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ப.குமாருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ப.குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மட்டுமின்றி, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த குமாருக்கு அதிமுக நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.பட்டாசு வெடித்தும், மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வின் போது சகாதேவ பாண்டியன், இராவணன், கும்படி கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்