திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் மார்ச் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
சிறுநீரக நோயுடன் நல்வாழ்வு வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் நேற்று (11 ஆம் தேதி) முதல் வரும் 13-ஆம் தேதி வரை இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இதில் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சினைகள், ரத்த சுத்திகரிப்பு, பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரகம் திசுப்பரிசோதனை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, பிராஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், சிறுநீரகப் புற்றுநோய் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.
திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிறுநீரக சிகிச்சை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் வசதி உள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.