திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில கூட்டுறவுத்துறையின் சார்பில்; முதன்முதலாக 97 நபர்களுக்கு காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.16 இலட்சம் கடனுதவிகள்
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள் வழங்கினார்.
--------------------
திருச்சிராப்பள்ளி கலையரங்கம் திருமணமண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதன்முதலாக 97 நபர்களுக்கு காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.16 இலட்சம் கடனுதவிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ அவர்கள் வழங்கினார். மாண்புமி;கு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.சீ.வளர்மதி ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பு கையேடுகளை வெளியிட்டனர்.
கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவிகள் மற்றும் இடுபொருள்களை விவசாயிகளுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் ஏழை எளிய நடுத்தர மக்கள் குறிப்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும் வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.03.2016 வரை சிறு குறு விவசாயிகளால் பெறப்பட்ட ரூ.5780 கோடி அளவிலான பயிர்க்கடன் நடுத்தரக்காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தையும் முதல் கையெழுத்தில் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தென்னை விவசாயிகள் கோரிக்கையின் படியும் தேர்தல் அறிக்கையில் கொப்பரை விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கொப்பரை தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் 20 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நேரடி கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் 2-ஆம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தவும் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும் விவசாயிகளின் வருவாயை பெருக்கும் பொருட்டு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 5094636 விவசாயிகளுக்கு ரூ.23214.24 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வரலாறு காணாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 828080 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.3236.22 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு (2016-2017) ரூ.6500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 31.05.2016 வரை 31036 விவசாயிகளுக்கு ரூ.186.81 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆறாவது முறையாக பொறுப்பேற்ற அன்றே 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார்கள். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன் ரத்து 100 யூனிட் மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசம் தாலிக்கு தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கல் கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல் 750 யூனிட் வரை இலவச மின்சாரம் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 500 டாஸ்மாக் சில்லரை கடைகள் மூடப்படும் எனவும் காலை 10.00 மணிக்கு பதிலாக மதியம் 12.00 மணிக்கு கடை திறக்க உத்தரவு என 5 முக்கிய கோப்பில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் கையெழுத்திட்டார்கள். இன்னும் எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்
மேலும்ää திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 2015-2016 ஆம்
ஆண்டு 42995 விவசாயிகளுக்கு ரூ.234.23 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 21727 நபர்களுக்கு 133.28 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்களுக்கு 7830 நபர்களுக்கு ரூ.127.46 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1196 நியாய விலைக்கடைகள் உள்ளன. இக்கடைகளில் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் காகிதம் இல்ல வகையில் விற்பனை முனைய இயந்திரம் மூலம் கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு கைபேசி மூலம் பொருட்கள் விற்பனை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படுவதால் பொதுமக்களிடம் இத்திட்டம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு மாநில அளவில் திருச்சி மாவட்ட மாநில நுகர்பொருள் வழங்கல்துறை ஆணையர் அவர்களால் வெள்ளி பட்டயம் வழங்கப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் மகத்தான திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத்துறை சார்ந்த 32514 நியாய விலைக்கடைகள் மேற்கொண்டு வருகின்றன என பேசினார்.
கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்கள் பாதுகாப்பு பராமரிப்பு காப்பீடு வழிகாட்டி தொடர்பான கையேடுகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவுத்துறையில் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்சங்கள் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு வட்டியில்லாத கடன்களை வழங்கி வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட கடன்கள் சிறுகுறு விவசாயிகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்க்கடன் வழங்குதலினால் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை தமிழகத்தில் இல்லை. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 கோடியை வட்டி மானியமாக விவசாயிகளுக்கு கடன் வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களான உரம் மற்றும் இயற்கை உரங்களையும் கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலங்;களுக்கு அருகிலேயே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கி வருகின்றன.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 50000 விவசாயிகளுக்கு குறையாமல் ரூ.225.00 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல உரங்களும் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்;கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக அம்மா சிறு வணிகக்கடன் திட்டம் பொருளாதாரத்தில் பிற்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக 6மூ வட்டியில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு உரங்களின் விலையை தனியார் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதை கட்டுப்படுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கருவியாக செயல்படுகின்றன.
கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் விளைப் பொருட்களை கட்டாய விற்பனை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தவிர்த்து விளை பொருட்கள் விலை உயரும் பொழுது விற்பனை செய்வதற்கு ஏதுவாக தானிய கிட்டங்கிகளை தமிழ்நாடு அரசு ரூ.500.00 கோடி அளவிற்கு மானியம் வழங்கி தமிழகம் முழுவதும் தானிய கிட்டங்குகள் கட்டப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
பண்ணை பசுமை நுகர்வோர் கடை பணியாளர்களுக்கு வழிகாட்டி கையேடுகளை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டு பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன்நடுத்தரக்கால கடன் நீண்டக்கால கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 67 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 100 மெ.டன்
கொள்ளளவு கொண்ட கிட்டங்குகள் கட்டப்பட்டு அவைகள் விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படுகின்றன. மேலும் கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்காக குறைந்த அளவில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. அதே போல பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில்
1196 நியாயவிலைக்கடைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை கோதுமை மண்ணெண்ணெய் துவரம் பருப்பு உளுந்தம் பருப்பு பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அரிசிக்கு விலை இல்லாமலும் மற்ற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் கிராமப்புற மற்றும் அதிக தொலைவில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பகுதிநேர கடைகள் தி;றந்து அவர்களுக்கு பொது விநியோகத்திட்டம் மூலமாக சேவை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவடித்தெரு கடை எண்.2 ஸ்ரீரெங்கநாதா கூட்டுறவு பண்டகசாலை பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜீ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் அரியமங்கலம் காமராஜர் நகரில் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியில் புதிய பண்ணை பசுமை நுகர்வோர் கடையையும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜீ அவர்கள் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆர்.சந்திரசேகர் (மணப்பாறை) திரு.என்.செல்வராஜ் (முசிறி) திருமதி.பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்) மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு.ஆர்.பழனிசாமி.இ.ஆ.ப. மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.ஜெயா துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ராமு மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.லதா (ஸ்ரீரங்கம்) திரு.ஞானசேகரன் (கோ.அபிஷேகபுரம்) மணிகண்டம் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.பி.முத்துகருப்பன் ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.அண்ணாதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் திரு.பத்மநாதன் சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வெங்கடாசலம் அமராவதி கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ஜெயபால் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.தமிழரசி திருமதி.பச்சையம்மாள் திரு.பூபதி திருச்சிராப்பள்ளி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கே.சி.ரவிச்சந்திரன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு.முத்துகுமாரசாமி திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்கள் திருமதி.தீபாசங்கரி திருமதி.பழனீஸ்வரி திருமதி.சித்ரா திரு.ராஜேந்தின் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்